- Advertisement -
Homeகிரிக்கெட்சிஎஸ்கேவின் எதிர்காலத்தை மனதில் வைத்து தோனி போட்ட பக்கா பிளான்?. அப்போ அடுத்த வருசமும் சம்பவம்...

சிஎஸ்கேவின் எதிர்காலத்தை மனதில் வைத்து தோனி போட்ட பக்கா பிளான்?. அப்போ அடுத்த வருசமும் சம்பவம் இருக்கா?

-Advertisement-

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-வது ஆண்டு ஐபிஎல் தொடரோடு சென்னை அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகி இருந்ததால் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி ஆடும் போட்டிகள் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. ஏனெனில் தோனியின் கடைசி சீசனாக இந்த தொடரானது இருக்கலாம் என்பதனால் இந்தியா முழுவதுமே அவரைக் காண ரசிகர்கள் லட்சக்கணக்கில் வர துவங்கியுள்ளனர்.

அதோடு சென்னை அணி எங்கு விளையாடினாலும் மஞ்சள் நிற ஜெர்சியுடன் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக காணப்படுகிறது. தோனியும் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து அளித்த சில கருத்துக்கள் அவர் கிட்டத்தட்ட இந்த ஆண்டு ஓய்வு பெறப்போகிறார் என்பதை உறுதி செய்தது. அந்த வகையில் ஏற்கனவே தோனி : எனக்கு ரசிகர்கள் நேரில் வந்து ஃபேர்வெல் கொடுக்கிறார்கள் என்றும் என்னுடைய கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன் என்றும் சில கருத்துக்களை வெளியிட ரசிகர்களும் அவர் இந்த ஆண்டு ஓய்வை அறிவிக்கப்போவதை உறுதி செய்தனர்.

ஆனால் கடந்த சில போட்டிகளுக்கு முன்னர் தோனி அளித்த பேட்டியில் : உங்களுக்கு வேண்டுமென்றால் கடைசி சீசனாக தெரியலாம் ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை என்று கூறியிருந்தார். இப்படி முன்னுக்கு பின் தோனி தனது ஓய்வு குறித்த கருத்துக்களை மாற்றி மாற்றி கூறவே மொத்தத்தில் தோனி ஓய்வு பெறப்போகிறாரா அல்லது தொடர்ந்து ஆடப்போகிறாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறப்போவதில்லை என்று கூறப்படுகிறது. அதோடு சிஎஸ்கே அணியில் அவர் செய்ய இருக்கும் மாற்றங்கள் குறித்தும் சில கருத்துக்கள் வெளியாகி உள்ளன. அதன்படி தோனி இந்த ஆண்டு ஓய்வு பெறப்போவதில்லை என்றும் இந்த ஆண்டு நிச்சயம் சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்பில் அவர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

-Advertisement-

அதோடு கோப்பையை வென்ற பின் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடும் தோனி இம்பேக்ட் பிளேயராக மட்டுமே அணியில் விளையாடுவார் என்றும் புதிய கேப்டன் நிச்சயம் அடுத்த தொடரில் விளையாடுவார் என்ற திட்டமும் சிஎஸ்கே அணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு கோப்பையை வென்று விட்டால் நிச்சயம் அடுத்த ஆண்டு இம்பேக்ட் பிளேயராக தோனி அணியிலிருந்து வீரர்களை சரியாக கட்டமைத்துவிட்டு அடுத்த ஆண்டே ஓய்வை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

அதோடு தற்போது வரை சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார்? என்பது உறுதியாகாத நிலையில் நிச்சயம் அடுத்த ஆண்டுக்கான கேப்டனை அவர் தேர்ந்தெடுத்த பிறகே அடுத்த ஆண்டு தன் ஓய்வை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டும் தோனி ஓய்வு பெறமாட்டார் என்ற நம்பிக்கையில் சி.எஸ்.கே ரசிகர்கள் உள்ளார்.

-Advertisement-

சற்று முன்