- Advertisement -
Homeகிரிக்கெட்நம்ம தல தோனியின் நம்ப முடியாத சாதனைகள்.. இதெல்லாம் இன்னொருவர் பண்றது சாத்தியமே இல்லை

நம்ம தல தோனியின் நம்ப முடியாத சாதனைகள்.. இதெல்லாம் இன்னொருவர் பண்றது சாத்தியமே இல்லை

-Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டோடு அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஆனாலும் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கான கிரேஸ் குறையவில்லை என்றே கூற வேண்டும்.

அதற்குக் காரணம் அவர் தலைமையில் இந்திய அணி நிகழ்த்திய பல சாதனைகள்தான். அவர் தலைமையில்தான் இந்திய அணி மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றது. அதுமட்டுமில்லாமல் அவர் வழிநடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

தோனி தலைமையிலான அணிகள் பல சாதனைகள் படைத்திருந்தாலும், தோனியின் தனிப்பட்ட சாதனைகள் சில யாராலும் எளிதில் முறியடிக்க முடியாத வண்ணம் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

கேப்டன் கூல் என அழைக்கப்படும் தோனி, சர்வதேச போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் சர்வதேச போட்டிகளில் செய்த ஸ்டம்பிங்களின் எண்ணிக்கை 195. அதே போல சர்வதேச போட்டிகளில் உலகின் மிக வேகமான ஸ்டம்பிங்கை செய்தவரும் தோனி தான். அவர் 0.08 வினாடிகளில் ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

ஒருநாள் போட்டிகளில் மிக வேகமாக ஐசிசி-யின் நம்பர் 1 இடத்துக்கு சென்ற சாதனையும் தோனி வசம் தான் உள்ளது. அவர் 42 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். கேப்டனாக அதிக சர்வதேச போட்டிககளில் விளையாடியவரும் அவரே. இது வரை 332 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக தலைமையேற்றுள்ளார் தோனி. சர்வதேச போட்டிகள் மட்டுமில்லாது அதிக ஐபிஎல் போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டவர் தோனிதான். ஐபிஎல்-ஐ பொறுத்தவரை 225 போட்டிகளில் அவர் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் 20 ஆவது ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் தோனி வசமே உள்ளது. அவர் 20 ஆவது ஓவரில் மட்டும் 713 ரன்கள் சேர்த்துள்ளார். அதே போல கடைசி ஓவரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரரும் தோனிதான். அவர் 20 ஆவது ஓவரில் மட்டும் 59 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அதிக ஐபிஎல் பைனல்கள் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மொத்தம் 10 ஐபிஎல் பைனல்களை விளையாடியுள்ளார் தோனி. ஐபிஎல் தொடரில் 42 ஸ்டம்பிங்குகளை செய்து அதிலும் முதல் இடத்தில் உள்ளார்.

-Advertisement-

சற்று முன்