- Advertisement -
Homeகிரிக்கெட்காஃபி குடிச்சிட்டுருந்த என்னை பேட்டிங் ஆட வெச்சுட்டாங்க.. அப்படி நடந்தா கோலி அடிச்சுருக்கமாட்டாரு - தினேஷ்...

காஃபி குடிச்சிட்டுருந்த என்னை பேட்டிங் ஆட வெச்சுட்டாங்க.. அப்படி நடந்தா கோலி அடிச்சுருக்கமாட்டாரு – தினேஷ் கார்த்திக்

-Advertisement-

நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணியின் பேட்டிங்கில் மிக முக்கியமான தூணாக இருந்த ஒருவர் தான் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக். இந்த சீசனில் ஏறக்குறைய பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழக்கும் தருவாயில் ஆர்சிபி அணி இருந்தாலும் ஆரம்பத்தில் அவர்கள் தோல்வி அடைந்த போட்டிகளில் கூட தனி ஆளாக போராடி வெற்றி பெறுவதற்கு ஏதாவது செய்ய முடியுமா என்பதில் அனைத்து விதமான முயற்சிகளையும் தினேஷ் கார்த்திக் செய்து பார்த்திருந்தார்.

ஆனால் அவை பெரிதாக பலன் கொடுக்காமல் போனாலும் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் அதிகமாக பாராட்டுகளை பெற்று வந்திருந்தது. தற்போது சிறந்த ஃபார்மிலிருக்கும் ஆர்சிபி அணி ஆரம்பத்தில் இன்னும் கொஞ்சம் கடின உழைப்பை போட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் பிளே ஆப்பிற்கு எளிதாக முன்னேறி தினேஷ் கார்த்திக்கின் உழைப்பிற்கும் சரியான அங்கீகாரம் கிடைத்திருக்கும்.

இருந்தாலும் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில் வரும் சீசனிலும் அந்த அணிக்காக இந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் மூன்று வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றிருந்த ஆர்சிபி அணி சமீபத்தில் குஜராத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தது.

148 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய அவர்கள் 92 ரன்களை ஆறு ஓவர்களில் தாண்டினாலும் அடுத்த 24 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை சடசடவென இழந்து விட்டனர். கைவசம் 4 விக்கெட்டுகள் இருக்க 32 ரன்கள் தேவை என்ற நிலை உருவானதால் திடீரென குஜராத் அணிக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனாலும் தினேஷ் கார்த்திக் சிறப்பாக கடைசி கட்டத்தில் ஆடி பெங்களூரு அணியின் வெற்றியையும் உறுதி செய்திருந்தார்.

-Advertisement-

இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த தினேஷ் கார்த்திக், “நாங்கள் பேட்டிங்கைத் தொடங்கிய போது நான் காபி கொடுத்துக் கொண்டிருந்தேன். நான்கு ஓவர்களான போது நான் பேட்டிங் செய்ய வேண்டாம் என்று நினைத்து தயாராகமலே இருந்தேன். அப்போதுதான் திடீரென போட்டி மாறி நான் பேட்டிங் செய்யும் நிலையும் உருவாகியிருந்தது. நான் பவுண்டரி அடிக்கும் விதமெல்லாம் அடிப்படையான கிரிக்கெட் ஷாட்களின்படி ஆடுகிறேன்.

மேலும் இந்த போட்டியை முடித்துக் கொண்டு கொடுக்க வேண்டும் என என்னை நானே தயார் செய்திருந்தேன். டாஸ் வென்றதும் எங்களுக்கு சாதகமாக, எங்களின் பந்துவீச்சாளர்களும் மிக அற்புதமாக செயல்பட்டு இருந்தனர். பாஃப் மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தாலும் முதலில் பேட்டிங் செய்திருந்தால் இது போன்ற ஷாட்களை அவர்கள் அடித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

மேலும் என்னுடன் ஸ்வப்னில் சிங் ஆடிக் கொண்டிருந்தபோது அவரிடம் நல்ல பந்துகளை அடித்து ஆட வேண்டும் என்றும் நல்ல உறுதியாக இருந்தால் மட்டும் ஸ்வீப் ஷாட்களை ஆட முயற்சி செய்ய வேண்டும் என கூறியிருந்தேன்” என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

-Advertisement-

சற்று முன்