- Advertisement -
Homeகிரிக்கெட்20 ரன் கூட தாண்டாத 9 பேர்... இங்கிலாந்துக்கு இப்படி ஒரு நிலையா... தன் முழு...

20 ரன் கூட தாண்டாத 9 பேர்… இங்கிலாந்துக்கு இப்படி ஒரு நிலையா… தன் முழு பலத்தை காட்டிய ஆப்கனிஸ்தான் – நடந்தது என்ன?

-Advertisement-

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் போட்டியானது இன்று அக்டோபர் 15-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தலைமையிலான ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அந்த வகையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் குவித்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 80 ரன்களையும், அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இக்ரம் அலிகில் 58 ரன்களையும் அடித்து அசத்தினர். இங்கிலாந்து அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களை மட்டுமே குவித்தது. இதன்காரணமாக 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது.

-Advertisement-

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி மிகப் பெரிய அணிகளுக்கு எதிராகவே ஆதிக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 66 ரன்களையும், டேவிட் மாலன் 32 ரன்களையும் குவித்தனர். மற்ற 9 வீரர்களும் 20 ரன்களை கூட தாண்டவில்லை.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஷித் கான் மற்றும் முஜ்புர் ரகுமான் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் தங்களது முதலாவது வெற்றி பதிவு செய்துள்ளது. அதோடு இங்கிலாந்து அணி இரண்டாவது தோல்வியும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்