- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியா பாலை எதோ பண்றாங்க...எனக்கு டவுட்டா இருக்கு.. பாலை செக் பண்ணனும்.. முன்னாள் பாக். வீரர்...

இந்தியா பாலை எதோ பண்றாங்க…எனக்கு டவுட்டா இருக்கு.. பாலை செக் பண்ணனும்.. முன்னாள் பாக். வீரர் கருத்துக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

- Advertisement 1-

உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தும் பந்துகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விரைந்து சரிபார்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராஸா கருத்து தெரிவித்து இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய கடைசி போட்டியில் இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது.

தனியார் செய்தி நிறுவனத்தின் உரையாடலின் போது பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ராஸா, “இதனை புரிந்து கொள்வதே மிகவும் கடினமாக இருக்கிறது. இந்தியா பேட்டிங் ஆடும் போது, அவர்கள் சிறப்பாக விளையாடுகின்றார்கள். ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போது எதிரணியினர் தடுமாறுகின்றார்கள். சில டி.ஆர்.எஸ். முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக இருந்துள்ளன.”

“அதிகபட்சமாக ஏழு முதல் எட்டு டி.ஆர்.எஸ். அழைப்புகள் மிகவும் நெருக்கமானதாக இருந்துள்ளன. இவை அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாகவே இருந்தது. ஆனால் இன்று இந்திய பந்துவீச்சாளர்களிடம் இருந்து வித்தியாசமான ஆக்ரோஷம் வெளிப்பட்டது. ஷமி மற்றும் சிராஜ் பந்துவீசும் போது, அவர்கள் ஆலன் டொலாண்ட் மற்றும் மக்யா நிட்னி ஆகியோருக்கு எதிராக விளையாடுவது போன்றே இருக்கிறது.”

“பந்துகளை சரிபார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இரண்டு அணி வீரர்களுக்கும் இரண்டு புதிய பந்துகள் வழங்கப்படும் என்று எனக்கு தெரியும், ஆனால் ஒருநாள் போட்டியில் அவர்கள் மூன்று ஸ்லிப்களை வைத்திருந்தனர். ஸ்டம்ப்புகளின் பின்னால் இருந்த கே.எல். ராகுல் சில பந்துகளை பிடிக்க சிரமத்தை எதிர்கொண்டார். பந்துகளின் மீது லக்வெர் கோட்டிங் கூடுதலாக இருக்குமோ என்று நினைக்கிறேன். எதிரணி வீரர்கள் பந்தை சரிபார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்று தெரிவித்து உள்ளார்.

- Advertisement 2-

இவரது கருத்துக்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “உண்மையில் இது நிஜமான கிரிக்கெட் நிகழ்ச்சியா? இல்லை எனில், பொழுதுபோக்கு அல்லது காமெடி என்று ஆங்கிலத்தில் எங்காவது குறிப்பிட வேண்டும். உருது மொழி இவ்வாறு எழுதப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன், ஆனால் என்னால் அதனை படிக்கவோ, புரிந்து கொள்ளவோ முடியவில்லை,” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்