- Advertisement -
Homeகிரிக்கெட்இனி நிம்மதியா தூக்கம் வரும்.. மேட்ச் தோத்தப்போ பாஃப் சந்தித்த வேதனை.. வெற்றி பெருமூச்சு விட்ட...

இனி நிம்மதியா தூக்கம் வரும்.. மேட்ச் தோத்தப்போ பாஃப் சந்தித்த வேதனை.. வெற்றி பெருமூச்சு விட்ட கேப்டன்..

-Advertisement-

இது உண்மையில் ஆர்சிபி ஆடிய ஆட்டமா என அனைவரையும் சந்தேகிக்கவும் வைத்திருந்ததுடன் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சீசனில் பல அணிகளை பயம் காட்டிய ஹைதராபாத் அணிக்கு பயம் காட்டியுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலுமே பலவீனமாக இருந்த ஆர்சிபி அணி, கடந்த ஆறு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்திருந்தது.

அப்படி ஒரு சூழலில் தான் இந்த தொடரில் அதிரடி பேட்டிங் படைக்கு பெயர் போன ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியும் ஆர்சிபிக்கு நெருங்க அனைவருமே நிச்சயமாக தோற்று விடும் என்றும் தான் கருதினர். ஆனால் போட்டியில் நிலைமை அப்படியே நேர்மாறாக இருந்தது. கொஞ்சம் கூட ஹைதராபாத் அணியை பார்த்து அசராமல் பெங்களூரு அணி ஆடிய ஆட்டமும், அவர்களின் பந்து வீச்சு வியூகமும் பல தரப்பிலான பாராட்டுக்களையும் பெற்று கொடுத்திருந்தது.

இதனை சில போட்டிகளுக்கு முன் ஆடியிருந்தாலே நிச்சயம் பிளே ஆப் செல்லும் அணிகளில் ஒன்றாக கூட இருந்திருக்கலாம் என ஆர்சிபி ரசிகர்கள் இந்த வெற்றிக்கு பின் புலம்பியும் வருகின்றனர். இந்த போட்டியில், ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்ய, 206 ரன்களையும் எடுத்திருந்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி வேகமாக விக்கெட்டுகளை பறிகொடுத்து கொண்டே இருந்தது.

ஹெட், அபிஷேக் ஷர்மா மற்றும் கிளாஸன் என யாருடைய அதிரடியும் ஆர்சிபி பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எடுபடாமல் போக அந்த அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்களில் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால், ஆர்சிபி 35 ரன்கள் வித்தியாசத்தில் 6 போட்டிகளுக்கு பிறகு வெற்றியை பதிவு செய்தது.

-Advertisement-

புள்ளிப் பட்டியலில் மாற்றம் ஏற்படவில்லை என்றாலும் இந்த போட்டிக்கு பின் உற்சாகமாக பேசியிருந்த ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ், “நாங்கள் கடைசி இரண்டு போட்டியில் நல்ல ஒரு போராட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம். ஹைதராபாத் அணி 270 க்கும் அதிகமாக அடித்தபோது நாங்களும் 260 ரன்கள் வரை எடுத்தோம். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியும் ஒரு ரன்னில் தவற விட்டோம். ஆனாலும் போட்டியை வெற்றி பெறுவது தான் ஒரு அணியாக அதிக தன்னம்பிக்கையை கொடுக்கும்.

இன்று இரவு நிம்மதியாக நான் தூங்குவேன். எனக்கு அதிக தன்னம்பிக்கை தரக்கூடிய ஒரே விஷயம் பர்ஃபார்மன்ஸ் மட்டும் தான். இங்கே போட்டி அதிகமாக உள்ளது. அனைத்து அணிகளும் பலமாக இருக்கும் நிலையில் நீங்கள் 100 சதவீதத்தை அளிக்கவில்லை என்றால் அது மிகவும் வேதனையாக இருக்கும். முதல் பாதி லீக் போட்டியில் எங்கள் அணிக்காக கோலி மட்டும் தான் ரன் அடித்து இருந்தார். ஆனால் இப்போது கேமரூன் கிரீன் மற்றும் படிதர் சிறப்பாக ஆடுகின்றனர்.

இதற்கு முன்பு தோல்வி பெறும் அணி முதலில் பேச வேண்டும் என்பதால் அப்படியே பேசி விட்டு நான் சென்று விடுவேன். ஆனால் இந்த முறை நான் இரண்டாவதாக பேச வேண்டும் என்பதையே மறந்து விட்டேன்” என கூறினார். அந்த அளவுக்கு வெற்றியே பார்க்காமல் துவண்டு போய் முதலில் பேசி பாஃப் பழக்கப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்