- Advertisement -
Homeவிளையாட்டுநரைனுக்கு எதிரா செஞ்ச பெரிய தப்பு.. பேட்டிங், பவுலிங் இரண்டுமே மோசம்.. விரக்தியில் கே எல்...

நரைனுக்கு எதிரா செஞ்ச பெரிய தப்பு.. பேட்டிங், பவுலிங் இரண்டுமே மோசம்.. விரக்தியில் கே எல் ராகுல்..

- Advertisement-

ஒரே தினத்தில் நடந்த இரு போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் ஏராளமான வித்தியாசங்கள் உருவானதுடன் மட்டுமில்லாமல் ஐபிஎல் சீசனை இன்னும் சுவாரசியப்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முன்னேற்றத்தை கண்டிருந்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியான ஆட்டத்தை வழக்கம்போல கையில் எடுத்ததுடன் மட்டுமல்லாமல் களமிறங்கிய அனைத்து வீரர்களுமே நல்ல பங்களிப்பை அளித்திருந்தனர்.

- Advertisement -

வழக்கம் போல சுனில் நரைன் 39 பந்துகளில் ஏழு சிக்ஸர்களுடன் 81 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் ராமன்தீப் சிங்கும் 6 பந்துகளில் மூன்று சிக்ஸர்களுடன் 25 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 235 ரன்களையும் எடுத்திருந்தனர். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, நல்லதொரு பேட்டிங்கை பவர் பிளே வரைக்கும் வெளிப்படுத்தி இருந்த நிலையில், பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய தொடங்கியது.

இதனால் அவர்களால் இலக்கை எட்டவே முடியாமல் போக, 137 ரன்களில் 17 வது ஓவரின் முதல் பந்திலேயே ஆல் அவுட்டாக்கி இருந்தனர். இந்த தோல்வியால் லக்னோ அணி ப்ளே ஆப் வாய்ப்புக்கு ஒரு சிறிய நெருக்கடியை உருவாக்கியுள்ள நிலையில், தோல்விக்கு பின் பேசியிருந்த கேப்டன் கே எல் ராகுல், “பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே மிக மோசமான பர்பாமன்ஸை வெளிப்படுத்தியுள்ளோம். நரேன் பவர் பிளே ஓவரில் நெருக்கடியை கொடுத்துவிட்டார்.

- Advertisement-

எங்களது பந்து வீச்சாளர்களாலும் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. சிறந்த வீரர்களை எதிர்த்து ஆடும் போது தான் உங்களது ஆட்டத்தை சோதிக்க முடியும். 235 ரன்கள் என்பது 20 முதல் 30 ரன்கள் அதிகமாக தான் இருந்தது. ஆனால் எங்களின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. நாங்கள் முன்பாகவே தயாராக இருந்து எதிரணியின் பேட்ஸ்மேன்களை பற்றியும் பேசி இருக்க வேண்டும்.

அதற்கான திட்டங்களை செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் இந்த போட்டியில் நாங்கள் அதனை செய்யவில்லை. நரைனுக்கு எதிராக இரண்டு பெரிய தவறுகளை செய்தோம். இந்த போட்டியில் இருந்து கடந்து சென்று எங்கே தவறு நடந்தது என்பதையும் பார்க்க வேண்டும். இனி வரும் போட்டிகளில் இன்னும் கொஞ்சம் அதிகம் பயமில்லாமல் ஆடுவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

சற்று முன்