- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித் ரிட்டயர்டு ஆனா அவர தான் கேப்டனா போடணும்.. முன்னாள் வீரர் சொன்ன சர்ப்ரைஸ் பெயர்.....

ரோஹித் ரிட்டயர்டு ஆனா அவர தான் கேப்டனா போடணும்.. முன்னாள் வீரர் சொன்ன சர்ப்ரைஸ் பெயர்.. இவரு அந்த லிஸ்ட்லயே இல்லையே..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணியை தோனி வழிநடத்திய பின், விராட் கோலி சிறப்பாக தலைமை தாங்கி வந்தார். தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டனாக தற்போது ரோஹித் ஷர்மா செயல்பட்டு வருகிறார். சில சமயம், எதாவது தொடரில் ரோஹித் ஒய்வு எடுக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா, கே எல் ராகுல் உள்ளிட்டோர் தலைமை பொறுப்பை ஏற்று நடப்பார்கள்.

சமீபத்தில் உலக கோப்பை முடிந்ததும் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை வழிநடத்தி இருந்தார். இப்படி ஒவ்வொரு தொடர்களிலும் கேப்டன்கள் மாறிக் கொண்டே இருக்கின்றனர். தொடர்ந்து, அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி, 3 டி 20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளது.

இதில் ஒரு நாள் தொடருக்கு கே எல் ராகுலும், டி 20 தொடரில் சூர்யகுமார் யாதவும், டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மாவும் என 3 வடிவிலான தொடருக்கு 3 கேப்டன்கள் இந்திய அணியை வழிநடத்த உள்ளனர். இப்படி நிறைய கேப்டன்களை இந்திய அணி பயன்படுத்தி வருவதால், ரோஹித் ஷர்மா கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற பின், யார் இந்திய அணியை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் வழி நடத்துவார்கள் என்ற ஒரு கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்த நிலையில், ரோஹித் ஷர்மாவிற்கு பிறகு, இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் தகுதியான வீரர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“நீண்ட காலமாக ஆடுவதை அடிப்படையாக கொண்டால் நிச்சயம் சுப்மன் கில் தகுதியான டெஸ்ட் கேப்டனாக.இருப்பார். ஆனால், இப்போதைக்கு அவர் பொருத்தமான வீரராக இருக்கமாட்டார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்த்தால் நிச்சயம் ரிஷப் பந்த் சரியான வீரராக இருப்பார். டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு 24 கேரட் தங்கம்.

போட்டியை மாற்றி அமைக்கும் குணம் படைத்த ரிஷப் பந்த், ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்த கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்யலாம்” என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். கடந்த ஆண்டு, கார் விபத்து ஒன்றில் சிக்கிய ரிஷப் பந்த், அதிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். விரைவில் அவர் பூரணமாக குணமடைந்து நீல நிற ஜெர்சியில் களமிறங்குவதை காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

சற்று முன்