- Advertisement 3-
Homeவிளையாட்டுதென்னாப்பிரிக்காவ வீழ்த்தணும்னா இத செய்யணும்.. இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சவால்.. ரகசியம் உடைத்த முன்னாள்...

தென்னாப்பிரிக்காவ வீழ்த்தணும்னா இத செய்யணும்.. இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சவால்.. ரகசியம் உடைத்த முன்னாள் ஜாம்பவான்..

- Advertisement 1-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மல்லுக்கட்ட உள்ள நிலையில் இதற்காக இந்திய அணி இந்தியாவில் இருந்து கிளம்பியுள்ளது.

இதில் டி 20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை போல தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களிலும் இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவை இந்தியா எளிதாக வென்றிருந்தாலும் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்புகள் மிக குறைவு தான்.

அதிலும் தென்னாபிரிக்க மண்ணில் இந்தியா இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல்வேறு சவால்கள் இந்திய அணிக்கு காத்திருக்கும் சூழலில், அவர்கள் எப்படி அதனை எதிர்கொள்ள போகிறார்கள் என்பது சிறந்த திட்டமிடலில் தான் உள்ளது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக்கஸ் காலிஸ், இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால் பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கண்ட மிக முக்கியமான வீரர்களில் ஒருவர் ஆல் ரவுண்டர் ஜாக்கஸ் காலிஸ். இவர் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன்பாக பேசுகையில், “இந்திய அந்த சிறந்த அணியாக தான் இருக்கிறது. ஆனால், தென்னாப்பிரிக்காவை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிக கடினம். டெஸ்ட் தொடர் நடக்கும் செஞ்சுரியன் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக இருக்கலாம். மற்றொரு மைதானமான நியூலேண்ட்ஸ் மைதானம் இந்திய அணிக்கும் சாதகமாக இருக்கலாம். இதனால், இந்த தொடர் நிச்சயம் மிகுந்த போட்டி நிறைந்தே இருக்கும்.

- Advertisement 2-

அதே போல டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு செஷனிலும் மாறி மாறி அணிகள் ஆதிக்கம் செலுத்தவும் வாய்ப்புள்ளது என்பதால் விறுவிறுப்பாகவே போட்டி இருக்கும்” என காலிஸ் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை இந்திய அணி, தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற போது இந்த தொடரை அவர்கள் வெல்லும் பட்சத்தில் ரோஹித் ஷர்மாவிற்கு அது மிகுந்த பெருமையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்