- Advertisement 3-
Homeவிளையாட்டுமுடிவுக்கு வந்த சீனியர் வீரரின் கதை.. ராகுல் டிராவிட் செய்த சம்பவம்.. இளம் வீரரால் இந்திய...

முடிவுக்கு வந்த சீனியர் வீரரின் கதை.. ராகுல் டிராவிட் செய்த சம்பவம்.. இளம் வீரரால் இந்திய அணியில் மாற்றம்

- Advertisement 1-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வியை அடைந்தது. இந்த தோல்வி இந்திய டெஸ்ட் அணியில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. சீனியர் வீரர்களை கழற்றிவிட பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதன் முதல் படியே தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் கொண்டு வரப்பட்ட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு புஜாரா நீக்கப்பட்ட போது, அவருக்கான கதவுகள் அடைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதனால் 3வது வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கி சொதப்பினால், புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராகவும், சுப்மன் கில்லை 3வது இடத்திலும் களமிறக்கியுள்ளார்.

இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் சுப்மன் கில்லை எந்த காரணம் கொண்டும் இந்திய அணியில் இருந்து பிசிசிஐ நீக்கப் போவதில்லை. இதனால் 3வது இடத்திற்கான வீரராக சுப்மன் கில் உருவாக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அப்படியில்லை என்றால், விராட் கோலி ஓய்வுபெறும் வரை கில் 3வது இடத்தில் ஆடுவார். அதன்பின் 4வது இடத்திற்கு கொண்டு செல்லப்பட வாய்ப்புகள் உள்ளது.

ஏற்கனவே ரஹானேவை நீக்கிய போது ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் அணிக்குள் இடம்பிடித்து தனது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் ஃபிட்னஸ் உடன் திரும்பினால், ரஹானேவை இந்திய அணியில் இருந்து நீக்க தேர்வுக் குழு கொஞ்சமும் யோசிக்காது என்றே எதிர்பார்க்கலாம். அதேபோல் உலகக்கோப்பைத் தொடருக்கு பின் ரோகித் சர்மா கேப்டன்சியில் இருந்து விலக வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement 2-

இதனால் ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா இருவரும் டெஸ்ட் அணிக்கு திரும்பிய பின், ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் விராட் கோலியை தவிர்த்து சீனியர் வீரர்கள் அனைவரையும் ஓரங்கட்ட பிசிசிஐ முடிவு செய்துள்ளது நன்றாக தெரிகிறது. இந்த மாற்றம் தோனி கேப்டன்சி போல் சுமூகமாக நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து ஷிகர் தவான் சுமூகமாக நீக்கப்பட்டார். இதனால் டெஸ்ட் அணியிலும் சுமூக மாற்றம் சாத்தியமாக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் ஷமி, பும்ரா, அஸ்வினுக்கு கீழ் இளம் வீரர்கள் கொண்டு வரப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

சற்று முன்