- Advertisement 3-
Homeவிளையாட்டுடி 20 உலக கோப்பைல செலக்ட் ஆகணும்னா.. ஹர்திக்கிற்கு ரோஹித் போட்ட கண்டிஷன்?.. பீதியில் மும்பை...

டி 20 உலக கோப்பைல செலக்ட் ஆகணும்னா.. ஹர்திக்கிற்கு ரோஹித் போட்ட கண்டிஷன்?.. பீதியில் மும்பை கேப்டன்

- Advertisement 1-

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் கடுமையாக தடுமாற்றம் கண்டு வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை தழுவியிருந்த மும்பை அணி அடுத்த இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றி பெற்று கம்பீரமாக கம்பேக் கொடுத்திருந்தது. முன்னதாக அவர்கள் தோல்வியடைந்த மூன்று போட்டிகளிலும் டீம் ஒர்க் சரியாக இல்லாததன் காரணமாக தோல்வியடைந்திருந்தது. ஆனால் அதே வேளையில் அவர்கள் வெற்றி பெற்ற அடுத்த இரண்டு போட்டியில் ஒரு கூட்டாக மிகச் சிறப்பாக இணைந்து ஆடி இருந்தனர்.

அப்படி இருக்கையில் மீண்டும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அவர்கள் தோல்வி அடைந்திருந்தது அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது. 207 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சமயத்தில் ரோஹித் மட்டும் தனியாக நின்று சதமடிக்க மற்ற யாருமே சிறந்த பங்களிப்பை அளிக்கவில்லை. இதனால் சென்னை அணியும் அசத்தலாக வெற்றி பெற மும்பை மீண்டும் ஒரு தடுமாற்றத்தை இந்த தொடரில் கண்டுள்ளது.

மீதமுள்ள 8 போட்டிகளில் மும்பை அணி குறைந்தபட்சம் 6 போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், அணியில் உள்ள குழப்பங்களை எல்லாம் சரி செய்துவிட்டு களமிறங்கினால் தான் அவர்களால் வெற்றிக்கனியை எட்டிப் பறிக்க முடியும் என்பதும் கிரிக்கெட் பிரபலங்களின் கருத்தாக உள்ளது.

இதனிடையே, கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு மிகப்பெரிய ஒரு சிக்கல் தற்போது உருவாகியுள்ளது. அவரின் கேப்டன்சியும் அதிக அளவில் விமர்சனத்தை சந்தித்துள்ள நிலையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தடுமாறி வருகிறார். அதிகமாக பேட்டிங்கில் ஜொலிக்காத ஹர்திக், தனது காயம் காரணமாக பந்து வீசாமல் இருந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

- Advertisement 2-

இதனிடையே இந்த ஆண்டு டி 20 உலக கோப்பையும் நடைபெற உள்ளதால் ஆல் ரவுண்டர்களை குறிவைத்து ரோஹித் ஷர்மா, ராகுல் டிராவிட் மற்றும் அஜித் அகர்கர் உள்ளிட்ட பிசிசிஐ நிர்வாகத்தினர் மீட்டிங் ஒன்றை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றது. இதில், ஹர்திக் பாண்டியா குறித்து விவாதம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஒருவர் இந்திய அணிக்கு தேவை என்ற சூழலில், அப்படி ஒரு வீரராக இருக்கும் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் பிசிசிஐ நிர்வாகத்தினரை வருத்தம் அடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் அதிகமாக ஹர்திக் பாண்டியா பந்துவீசி தனது திறனை நிரூபிக்க வேண்டும் என்பதும் இது தொடர்பான நிபந்தனை ஒன்றினை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹர்திக் பாண்டியா தனது ஆட்டத்தை நிரூபிக்க தவறினால் அவருக்கு அடுத்தபடியாக சென்னை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே உள்ளிட்ட ஆல் ரவுண்டர்களுக்கு டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்