- Advertisement -
Homeவிளையாட்டுகடுப்பாகி ஷ்ரேயாஸ் ஐயரை நோக்கி பந்தை எறிந்த ஹாரிஸ் ரவுப்... அம்பயர் கொடுத்த வார்னிங்... நடந்தது...

கடுப்பாகி ஷ்ரேயாஸ் ஐயரை நோக்கி பந்தை எறிந்த ஹாரிஸ் ரவுப்… அம்பயர் கொடுத்த வார்னிங்… நடந்தது என்ன?

- Advertisement-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 12-வது போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.

அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 42.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை மட்டுமே குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ரிஸ்வான் 49 ரன்களையும், பாபர் அசாம் 50 ரன்களையும் அடித்தனர்.

பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியிடம் வெற்றியே பெற்றதில்லை என்கிற மோசமான நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரிலாவது இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த பாகிஸ்தான அணி இப்படி 200 ரன்கள் கூட அடிக்காமல் ஆட்டம் இழந்தது பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 155 ரன்கள் என்கிற நிலையில் இருந்து 191 ரன்கள் அனைத்து விக்கட்டுகளையும் பாகிஸ்தான் அணி இழந்தது அந்த அணியின் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

- Advertisement-

இப்படி பேட்டிங்கில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியானது பந்துவீச்சின் போதும் இந்திய அணியின் அதிரடியால் நம்பிக்கை இன்றி விளையாடியது. இதனால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற பாகிஸ்தான் வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சில தேவையற்ற செயல்களை மைதானத்தில் செய்தனர். அந்த வகையில் இன்றைய போட்டியின் போது இந்திய அணி துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியதால் பாகிஸ்தான் வீரர்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்றனர்.

அதிலும் குறிப்பாக 11-வது வரை வீசிய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் வீசிய பந்தினை ஷ்ரேயாஸ் ஐயர் அடிக்க நினைக்காமல் தடுத்த போதிலும் அந்த பந்தினை பிடித்த ஹாரிஸ் ரவுப் நேராக ஷ்ரேயாஸ் ஐயரை நோக்கி விரக்தியில் த்ரோ அடித்தார். நல்லவேலையாக பந்து ஷ்ரேயாஸ் ஐயரின் மீது படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. இதன் காரணமாக நடுவர் அவரை அழைத்து வார்னிங் கொடுப்பது போல பேசினார்.

சற்று முன்