- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியா உலக கோப்பைய கோட்டை விட்டது இதுனாலயா.. ஐசிசி சொன்ன தகவல்.. கடுப்பான கிரிக்கெட் ரசிகர்கள்..

இந்தியா உலக கோப்பைய கோட்டை விட்டது இதுனாலயா.. ஐசிசி சொன்ன தகவல்.. கடுப்பான கிரிக்கெட் ரசிகர்கள்..

- Advertisement 1-

கடந்த மாதம் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரை பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஆறாவது முறையாக கைப்பற்றி அசத்தி இருந்தது. முன்னதாக அரை இறுதி போட்டி வரை எந்த தோல்வியும் சந்திக்காமல் பத்து வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதி பெற்றிருந்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள், அகமதாபாத் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் இறுதி போட்டியை ஆடி இருந்தனர்.

இந்திய அணி அப்போது இருந்த ஃபார்மிற்கு நிச்சயமாக கோப்பையை கைப்பற்றி விடுவார்கள் என்று தான் அனைவரும் கருதினர். ஆனால் ரசிகர்கள் நினைத்தது அப்படியே தலைகீழாக மாறி இருந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. தொடர்ந்து அடிய ஆஸ்திரேலியா அணி, ஹெட்டின் சதத்தின் உதவியுடன் இலக்கை எட்டிப் பிடித்ததுடன் ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றி இருந்தது. நிச்சயம் இந்திய அணி கோப்பையை வெல்லும் என காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சி இருந்தது.

இருந்தாலும் இன்னொரு பக்கம், இந்திய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில் உள்ளிட்ட பலர் மிகச் சிறப்பான பங்களிப்பை தொடர் முழுக்க அளித்திருந்தனர். இந்திய அணி தற்போது தோல்வியை தழுவினாலும் நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலக கோப்பையை மிகவும் பலமாக மீண்டு வந்து வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் ஊக்குவிக்கும் வகையில் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியின் பிட்ச் குறித்து தற்போது ஐசிசி வெளியிட்ட அறிக்கை பற்றிய தகவல், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement 2-

பொதுவாக ஒரு கிரிக்கெட் தொடர் முடிந்த பின்னர் அதில் பயன்படுத்தப்பட்ட பிட்ச் குறித்து மதிப்பீடு ஒன்றை ஐசிசி அறிக்கையாக வெளியிடும் என தெரிகிறது. அந்த வகையில் இந்திய அணி உலக கோப்பை தொடரில் மோதிய 11 போட்டிகளில் ஐந்து போட்டிகள் நடந்த பிட்ச் மிகவும் சராசரியானது என ஐசிசி ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இறுதி போட்டியின் பிட்சும் அடங்கும். முன்னதாக, இந்த போட்டியில் இந்தியா தோற்றதன் காரணமாக டிராவிட் உள்ளிட்ட பலரும் பிட்சை தான் விமர்சனம் செய்திருந்தனர். பின்னர் பிட்ச் குறித்து பல்வேறு விமர்சன கருத்துக்களும் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் இந்திய அணி மோதிய போட்டியில் மிகச்சிறந்த பிட்ச் என நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டி பிட்சை ஐசிசி குறிப்பிட்டதாக தகவல்கள் கூறுகின்றது.

ஒரு வேளை இந்தியா நினைத்தது போல பிட்ச் அமைந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்குமா என தற்போது ரசிகர்கள் சிலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்