- Advertisement -
Homeகிரிக்கெட்ஒற்றை ஆளாய் ஓடவிட்ட ரோகித்... படுதோல்வியான பாகிஸ்தான்... புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றம்

ஒற்றை ஆளாய் ஓடவிட்ட ரோகித்… படுதோல்வியான பாகிஸ்தான்… புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றம்

-Advertisement-

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான 12-ஆவது லீக் போட்டியானது இன்று அகமதாபாத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அந்த வகையில் இன்றைய போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது சிறப்பான துவக்கத்தைப் பெற்று 30 ஓவர்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து நிதானமான ஆட்டத்தை விளையாடி இருந்தது.

ஆனாலும் அதன் பின்னர் மிகப்பெரிய சந்தித்து சிக்கலில் சிக்கிய பாகிஸ்தான் அணியானது இறுதியில் 42.5 ஓவர்களில் 191 ரன்கள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களையும், ரிஸ்வான் 49 ரன்களையும் குவித்தனர்.

அதனை தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடி 30.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

-Advertisement-

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 86 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தற்போது இந்த உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது.

அதன்காரணமாக புள்ளி பட்டியலிலும் முதலிடத்திற்கு சென்றுள்ளது. இந்திய அணியை அடுத்து நியூசிலாந்து அணியும் அதே 6 புள்ளிகளை பெற்று இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

-Advertisement-

சற்று முன்