- Advertisement -
Homeகிரிக்கெட்எனக்கு உற்சாகம் இல்லப்பா... பாகிஸ்தான் கிட்டேன் நான் எதிர்பார்த்த ரன்னே வேற... அடித்தளம் அமைச்சதே இவங்க...

எனக்கு உற்சாகம் இல்லப்பா… பாகிஸ்தான் கிட்டேன் நான் எதிர்பார்த்த ரன்னே வேற… அடித்தளம் அமைச்சதே இவங்க தான் – வெற்றிக்கு பின் ரோகித் பேட்டி

-Advertisement-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருருந்தது. எப்பொழுதுமே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும் வேளையில் இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்ததில்லை என்ற சாதனையை மீண்டும் தக்க வைத்துள்ளது.

அதோடு இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரில் ஹாட்ரிக் வெற்றியையும் பதிவு செய்து இந்த தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 191 ரன்களை மட்டுமே குவித்தது.

பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 30.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

இன்றைய போட்டியிலும் எங்களது பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இந்த மைதானம் 190 ரன்கள் அடிக்கக்கூடிய மைதானம் கிடையாது. ஒரு கட்டத்தில் நாங்கள் பாகிஸ்தான் அணி 280 ரன்கள் வரை குவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் செயல்பட்ட விதம் இன்று என்னை பெருமை அடைய வைத்திருக்கிறது. எந்த பந்துவீச்சாளர் கையில் பந்து எடுத்தாலும் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.

-Advertisement-

ஒரு கேப்டனாக நான் அவர்களை மேற்பார்வையிடும் பணியை மட்டுமே செய்தேன். எங்களிடம் ஆறு பவுலர்கள் சரியான பணியை செய்ய காத்திருக்கின்றனர். எனவே அவர்களை சரியாக பயன்படுத்துவதே எனக்கு கேப்டனாக ஒரு வேலையாக மாறியது. இந்த மைதானத்திற்கு ஏற்ப வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஏனெனில் இந்த உலகக் கோப்பை தொடரில் நாங்கள் நுழைவதற்கு முன்னதாகவே எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரன்களை குவித்து இருந்தனர். இதன் காரணமாக எந்தெந்த வீரர்கள் எந்தெந்த இடத்தில் விளையாட வேண்டும் என்ற தெளிவு எங்களிடம் இருந்தது.

பொதுவாக, எல்லாமே சரியாக அமைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் பெரிதாக உற்சாகம் அடைய விரும்ப வில்லை. அதே நேரம் தாழ்வாகவும் இருக்க விரும்பவில்லை. நடுநிலையாக இருக்கவே விரும்புகிறோம். அமைதியாக அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற விரும்புகிறோம். நாங்கள் எதிர்கொள்ளும் அணைத்து அணிகளுமே வலுவனைவை தான். அன்றை தினத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது தான் முக்கியம். அதை தான் நாங்கள் செய்ய முயல்கிறோம் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்