- Advertisement 3-
Homeவிளையாட்டுகுவிந்த ரெக்கார்டுகள்... தெறிக்கவிட்ட சாதனை பட்டியல்... ஒரே போட்டியில் உலகையே திரும்பி பார்க்கவைத்த இந்திய அணியின்...

குவிந்த ரெக்கார்டுகள்… தெறிக்கவிட்ட சாதனை பட்டியல்… ஒரே போட்டியில் உலகையே திரும்பி பார்க்கவைத்த இந்திய அணியின் சாதனை லிஸ்ட் இதோ

- Advertisement 1-

உலகக் கோப்பை 2023 தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது. நேற்று தனது ஏழாவது லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட இந்திய அணி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெற்ற வெற்றியோடு இந்திய அணி பல்வேறு மைல்கல் சாதனைகளை படைத்து இருக்கிறது.

– 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற வெற்றி உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக பதிவாகி இருக்கிறது. இந்திய அணிக்கு இது இரண்டாவது சிறப்பான வெற்றியாக மாறி இருக்கிறது. முன்னதாக ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணியின் சிறப்பான வெற்றிகளில் முதன்மையானதாக இருக்கிறது.

– முழு அணியின் ஒட்டுமொத்தமான குறைந்தபட்ச ஸ்கோராக இலங்கை அணியின் 55 ரன்கள் இருக்கிறது. முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கனடா அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது, மிகக் குறைந்த ஸ்கோர் ஆக பதிவாகி இருக்கிறது.

- Advertisement 2-

– இந்திய அணி 357/8 என்ற இலக்கை எட்டிய போதிலும், தனிநபர் சதம் எதுவும் அடிக்கப்படாதது உலகக் கோப்பை வரலாற்றில் சாதனையாகி இருக்கிறது. இதில் சுப்மன் கில் 92, விராட் கோலி 88 மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்களை அடித்தனர்.

– முகமது ஷமியின் 18 ரன்களை விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அவர் நான்காவது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

– உலகக் கோப்பை தொடரில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் உடன் முகமது ஷமி பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் உலகக் கோப்பை தொடரில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

– உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் முகமது ஷமி பெற்று இருக்கிறார். இவர் இதுவரை 45 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். முன்னதாக ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் உலகக் கோப்பை தொடர்களில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

– ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையாக தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்று இருக்கிறார்.

சற்று முன்