- Advertisement 3-
Homeவிளையாட்டுஒன்றரை நாளில் முடிந்த டெஸ்ட்.. கமெண்ட் பண்ண வாயை மொத்தமாய் அடைத்த இந்திய அணி..

ஒன்றரை நாளில் முடிந்த டெஸ்ட்.. கமெண்ட் பண்ண வாயை மொத்தமாய் அடைத்த இந்திய அணி..

- Advertisement 1-

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே ஆரம்பமான 2 வது டெஸ்ட் போட்டி, 2 வது நாளின் 2 வது செஷனிலேயே முடிவுக்கு வந்துள்ளது. முதல் நாளிலேயே இரண்டாவது இன்னிங்ஸ் கூட இந்த போட்டிக்கு நடுவே ஆரம்பமாகி இருந்தது. முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த தெ. ஆ அணி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமானது.

வெறும் 55 ரன்களுக்குள் அவர்கள் ஆல் அவுட்டான நிலையில், டெஸ்ட் போட்டியில் அவர்களின் குறைந்தபட்ச ஸ்கோராகவும் பதிவானது. தொடர்ந்து தங்களின் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி நன்றாக ஆடினாலும் கடைசி கட்டத்தில் வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் பலமாக திகழ்ந்த இந்திய அணி, மேற்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததுடன் மோசமான சாதனைக்கும் சொந்தக்காரர்கள் ஆகினர்.

153 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாக, தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை முதல் நாளிலேயே ஆரம்பம் செய்து வைத்தது தெ. ஆ அணி. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்களை அவர்கள் எடுத்திருந்தனர். இதனையடுத்து இரண்டாவது நாளில் தங்களின் பேட்டிங்கை தொடர்ந்த தெ. ஆ அணி, ரன் சேர்க்கவே கடுமையாக திணறியது என்று தான் சொல்ல வேண்டும்.

தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் மட்டும் ஒரு பக்கம் தனியாக நின்று ரன் சேர்த்தபடி இருக்க, இன்னொரு புறம் விக்கெட்டுகள் சிறிய இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்தது. இவர் 103 பந்துகளில் 17 ஃபோர்கள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 106 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற எந்த வீரர்களும் சிறப்பாக ஆடாததால், தெ. ஆ அணி 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement 2-

முதல் இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதே போல, இரண்டாவது இன்னிங்சில் பும்ரா 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு இன்னிங்ஸ்களிலுமே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் தெ. ஆ அணியின் இருபது விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

தொடர்ந்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி, 12 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. முதல் டெஸ்டில் மூன்றாவது நாளிலேயே தோற்று போனதற்கு கடுமையான விமர்சனத்தை சந்தித்திருந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் அமர்க்களமாக வெற்றி பெற்று தங்கள் மீதான விமர்சனத்திற்கு தக்க பதிலடியையும் கொடுத்துள்ளது. மேலும், தொடரையும் அவர்கள் சமன் செய்து மிக சிறப்பாக தெ. ஆ சுற்றுப்பயணத்தை முடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்