- Advertisement 3-
Homeவிளையாட்டுஒரு டீமா இந்திய பவுலர்ஸ் செஞ்ச விஷயம்.. நாங்க தோத்ததே அதுனால தான்.. அயர்லாந்து கேப்டன்...

ஒரு டீமா இந்திய பவுலர்ஸ் செஞ்ச விஷயம்.. நாங்க தோத்ததே அதுனால தான்.. அயர்லாந்து கேப்டன் வெளிப்படை..

- Advertisement 1-

மொத்தம் 20 அணிகள் டி 20 உலக கோப்பைத் தொடரில் பங்கெடுத்துள்ள நிலையில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளை தவிர மற்ற எந்த பெரிய அணிகளும் இதுவரை எந்த போட்டிகளிலும் ஆடவில்லை. அனைத்து அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள சூழலில் இதில் பெரும்பாலான குரூப்பில் சிறிய அணிகள் தான் அதிகம் இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள குரூப் ஏ வில் அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் ஆடிய போட்டியில் இரண்டு அணிகளும் 190 ரன்களுக்கு மேல் அடித்து அனைவரையும் அசர வைத்திருந்தனர்.

அதே வேளையில் அயர்லாந்து அணியும் ஐசிசி தொடர்களில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்திருந்ததால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக தான் இருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் தங்களின் முதல் லீக் போட்டியில் இந்திய அணியை அவர்கள் எதிர்கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் இந்திய கிரிக்கெட் அணியும் சிறப்பான வீரர்களை வைத்திருந்ததால் எப்படி வேண்டுமானாலும் ஆடும் லெவனை தேர்வு செய்யலாம் என்ற நிலை தான் இருந்தது.

இதற்கிடையே இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்திருந்தார். அதன்படி ஆடிய அயர்லாந்து 16 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 13 வது ஓவரிலேயே போட்டியை முடிக்க, ரோஹித் சர்மா 52 ரன்களும் ரிஷப் பந்த் 36 ரன்னும் எடுத்திருந்தனர்.

- Advertisement 2-

இதனால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற, 3 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு பின் பேசியிருந்த அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங், “டாஸ் இந்த போட்டியில் முக்கிய பங்கு வகித்தது. மேலும் இந்த மேகமூட்டமாக சூழ்நிலையும் எங்கள் பேட்டிங் தடுமாற காரணமாக இருந்தது.

நாங்கள் இந்திய பந்து வீச்சாளருக்கு எதிராக நெருக்கடியை போட்டிருக்க வேண்டும். அவர்கள் அப்படி எந்த இடத்திலும் வாய்ப்பு தருவதற்கான தவறுகளை செய்யவில்லை. ஒரு குழுவாக சிறந்த லெந்த்தில் அவர்கள் பந்து வீசியது அபாரமாக இருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் இங்கே அடுத்த போட்டியில் ஆடுகிறோம். கனடாவிற்கு எதிராக நிச்சயம் சிறப்பாக ஆடுவோம் என நம்புகிறோம்” என கூறினார்.

சற்று முன்