- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித் இடத்தை தட்டித் தூக்கிய ஜெய்ஸ்வால்.. கேப்டனையே கதிகலங்க வெச்ச சம்பவம்...

ரோஹித் இடத்தை தட்டித் தூக்கிய ஜெய்ஸ்வால்.. கேப்டனையே கதிகலங்க வெச்ச சம்பவம்…

- Advertisement 1-

டெஸ்ட் போட்டிகள் என்றால் அனுபவமுள்ள வீரர்கள் தான் ஆட வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே கோலி, ஷமி ஆகியோர் விலகி இருந்த நிலையில், தொடருக்கு நடுவே காயம் காரணமாக கேஎல் ராகுலும் விலகினார்.

இப்படி இந்திய அணியின் முன்னணி வீரர்கள் டெஸ்ட் தொடரில் இடம் பெறாததால் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று அனைவரும் கருதினர். ஆனால் எங்கிருந்தோ வந்து போட்டியை மாற்றுவது போல சர்பராஸ் கான், ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேல், சுப்மன் கில் என 25 வயது கூட ஆகாத இளம் வீரர்கள் பட்டையை கிளப்பினர் என்று தான் சொல்ல வேண்டும்.

தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பொக்கிஷம் போல பயன்படுத்திக் கொண்ட இவர்கள் சிறப்பாக அடி இந்திய அணியை வெற்றி பாதைக்கும் அழைத்துச் சென்றிருந்தனர். அதிலும் நான்காவது டெஸ்ட்டில் துருவ் ஜூரேல் அடித்த 90 மற்றும் 39 ரன்கள், இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருந்தது.

இதனிடைய இந்த தொடரில் மிகவும் அதிகமாக பாராட்டுக்களை பெற்ற இளம் வீரர் என்றால் அது நிச்சயம் ஜெய்ஸ்வால் தான். ஒரே டெஸ்ட் தொடரில் கிட்டத்தட்ட 655 ரன்கள் வரை அடித்துள்ள ஜெய்ஸ்வால், கடைசி டெஸ்டில் மொத்தமாக 100 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற மகத்தான சிறப்பை பெறும் வாய்ப்பும் உருவாகி உள்ளது.

- Advertisement 2-

அது மட்டுமில்லாமல், அடுத்தடுத்து இரண்டு இரட்டைச் சதங்களை இங்கிலாந்து அணிக்கு எதிராக தட்டி தூக்கியிருந்த ஜெய்ஸ்வால், ஒரே தொடரில் அதிக சிக்ஸர்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றிருந்தார். இப்படி பல சாதனைகளை தன் பக்கம் எழுதி வரும் ஜெய்ஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் கண்டுள்ள முன்னேற்றம் பலரையும் மிரண்டு பார்க்க வைத்துள்ளது.

முன்னதாக மூன்றாவது போட்டியின் முடிவில் அவர் 14 இடங்கள் முன்னேறி 15 வது இடத்தை பிடித்திருந்தார். ஆனால் நான்காவது டெஸ்ட்டில் இன்னும் சிறப்பாக அவர் ஆடியதன் பெயரில் அடுத்த முன்னேற்றம் கண்டுள்ள ஜெய்ஸ்வால், தற்போது 12வது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முன்பாக விராட் கோலி மட்டும் தான் 9 வது இடத்தில் இந்திய வீரராக உள்ளார்.

ஜெய்ஸ்வாலை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 13 வது இடத்திலும் ரிஷப் பந்த் 14 வது இடத்திலும் உள்ளனர். இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் கூட ஆடாத ஜெய்ஸ்வால் அதற்கு முன்பாக கேப்டன் ரோகித் சர்மாவின் இடத்தை தட்டி பிடித்து முன்னேற்றம் கண்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாகவும் மாறியுள்ளது.

சற்று முன்