- Advertisement -
Homeகிரிக்கெட்வந்த வேகத்தில் தரமான சாதனை.. கெயில், கோலியால் முடியாததை நான்கே போட்டியில் முடித்த ஆஸி. புயல்..

வந்த வேகத்தில் தரமான சாதனை.. கெயில், கோலியால் முடியாததை நான்கே போட்டியில் முடித்த ஆஸி. புயல்..

-Advertisement-

ஐபிஎல் போட்டியின் முதல் பாதியில் ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலம் வாய்ந்து காணப்படும் நிலையில் இனி வரும் போட்டிகளில் எந்த அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் டாப் இடத்தை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது நிச்சயம் புரியாத புதிர் தான். திடீரென புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் இருக்கும் அணிகள் கூட விஸ்வரூபம் எடுத்து பலமாக விளங்கும் அணிகளுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும்.

மேலும் ஒரு அணியின் தோல்வி மற்ற பல அணிகளுக்கு சாதகமாகவும், அதே நிலையில் பாதகமாகவும் இருக்க வாய்ப்புள்ளதால், மிச்சம் இருக்கும் போட்டிகளில் அனைத்து அணிகளுமே துடிப்பான விளையாட்டை காட்டும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் தான் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஆடியது.

குஜராத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் முறையே புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திலும், எட்டாவது இடத்திலும் உள்ளனர். ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் இரு அணிகளுக்குமே இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் சூழலில் குஜராத் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 44 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 11 ரன்களில் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரரான ஜேக் ஃப்ரேஷர் 23 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். சாய் ஹோப் 5 ரன்களில் அவுட்டாக கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் நிதானமாக ரன் சேர்த்து வருகின்றனர்.

-Advertisement-

இதனிடையே, ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரரான ஜேக் ஃப்ரேஷர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடி வரும் நிலையில் இதுவரை நான்கு போட்டிகளில் 163 ரன்கள் எடுத்துள்ளார். இவரின் சராசரியும் 40 -க்கு மேல் உள்ள நிலையில், ஸ்ட்ரைக் ரேட் 211 க்கு மேல் உள்ளது. மொத்தம் 16 சிக்ஸர்கள் மற்றும் 11 ஃபோர்களை பறக்க விட்டுள்ள ஜேக் ஃப்ரேஷர் பவுண்டரியில் தான் இந்த தொடரில் 80% ரன்களையும் குவித்துள்ளார்.

அனைத்து போட்டியிலும் சிக்சர் அடித்து வரும் ஜேக் ஃப்ரேஷர் மிக முக்கியமான ஒரு சாதனையையும் ஐபிஎல் வரலாற்றில் படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் ஆடிய முதல் நான்கு போட்டிகளில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த வீரர்களே இதுவரை இரண்டு பேர் தான் இருந்தனர்.

ராஸ் டெய்லர் மற்றும் தீபக் ஹூடா என இரண்டு பேர் கொண்ட இந்த பட்டியலில் தான் தற்போது ஜேக் ஃப்ரேஷர் ஆடியுள்ள முதல் நான்கு ஐபிஎல் போட்டிகளில் குறைந்தது 2 சிக்சர்களாவது அடித்து மூன்றாவது வீரராகவும் இடம் பிடித்து ஐபிஎல் ஜாம்பவான்களான கெய்ல், கோலி, ரோஹித் ஷர்மா, டிவில்லியர்ஸ், ரெய்னா உள்ளிட்டோர் நிகழ்த்த முடியாத சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

-Advertisement-

சற்று முன்