- Advertisement 3-
Homeவிளையாட்டுஎடுத்தது ஒரே விக்கெட்.. இப்படி ஒரு சாதனையா? பும்ரா செய்த மாஸ் சம்பவம்.

எடுத்தது ஒரே விக்கெட்.. இப்படி ஒரு சாதனையா? பும்ரா செய்த மாஸ் சம்பவம்.

- Advertisement 1-

உலகக் கோப்பை போட்டியின் போது ஒரு இன்னிங்ஸ்-இன் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் இந்திய அணி பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்று இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில், இலங்கை அணிக்கு எதிராக பந்துவீசிய இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார்.

இவர் வீசிய முதல் பந்திலேயே இலங்கை அணியின் துவக்க வீரரான பதும் நிசங்கா LBW முறையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். சரியான லைனில் பும்ரா வீசிய பந்து பேட்டரை விட்டு தள்ளி சென்று, நிசங்காவின் பேட்களின் மேல் உயரமாக அடித்ததாக தெரிந்தது. இதன் காரணமாக நிசங்கா சந்தேகத்தில் ரிவ்யூ எடுத்தார்.

ரிவ்யூவில் பந்து ஸ்டம்ப்களின் மேல் இருந்த பெயில்ஸ்-ஐ தட்டியது. அந்த வகையில், அவர் அவுட் ஆனது ரிவ்யூவிலும் உறுதியானது. உலகக் கோப்பையை பொருத்தவரை ஒரு இன்னிங்ஸ்-இன் முதல் பந்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும், இத்தகைய சாதனையை இதுவரை படைத்ததில்லை. இவரை தொடர்ந்து முகமது சிராஜ் மற்றும் ஷமி இலங்கை அணியை திணறடிக்கும் வகையில் பந்துவீசினர்.

முகமது ஷமி தன் பங்கிற்கு ஐந்து விக்கெட்டுகளையும், சிராஜ் அதிரடியாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். போட்டி முடிவில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் இலங்கை அணி 55 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement 2-

இந்த வெற்றி மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்று இருக்கிறது.

சற்று முன்