- Advertisement -
Homeகிரிக்கெட்இனி சிக்ஸ் அடிச்சா தான் ஜெயிக்க முடியும்.. ராஜஸ்தான் பேட்டிங்ல பெரிய தப்பு பண்ணிட்டேன்.. ராகுலின்...

இனி சிக்ஸ் அடிச்சா தான் ஜெயிக்க முடியும்.. ராஜஸ்தான் பேட்டிங்ல பெரிய தப்பு பண்ணிட்டேன்.. ராகுலின் சொதப்பல் முடிவு..

-Advertisement-

கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, இதுவரை ஆடி உள்ள கடந்த 2 ஐபிஎல் சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். ஆனால் அதே வேளையில் அவர்கள் ஒரு முறை கூட இறுதி போட்டிக்கு முன்னேறவில்லை. அந்த முயற்சியை நடப்பு சீசனில் கையில் எடுத்துள்ள லக்னோ அணி, கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ச்சியாக வெற்றி கண்டு புள்ளி பட்டியலிலும் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருந்தது.

இதனால் எட்டில் 5 போட்டிகள் வென்று புள்ளி பட்டியலில் மாஸாக திகழ்ந்த லக்னோ அணியின் வெற்றி பாதையில் மீண்டும் ஒரு தோல்வி முட்டுக்கட்டையை போட்டுள்ளது. பலம் வாய்ந்து முதலிடத்தில் கெத்தாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தங்களின் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டிருந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்து 196 ரன்கள் எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்த வீரர்களாக ஜூரேல் மற்றும் சாம்சன் ஆகியோர் திகழ்ந்தனர். மூன்று விக்கெட்டுகளை ராஜஸ்தான் இழக்க சற்று நெருக்கடி உருவாகியிருந்தாலும் அதனை இந்த இரண்டு பேரும் சிறப்பாக கையாண்டு அணியை மீட்டெடுத்தனர். அது மட்டும் இல்லாமல் தங்களின் வெற்றியையும் கடைசி கட்டத்தில் எளிதாக மாற்றி இருந்தனர்.

19 ஓவரில் வெற்றியை பெற்ற ராஜஸ்தான் அணியின் பிளே ஆப் வாய்ப்பும் உறுதியாகி விட்டது. அதே வேளையில், 9 போட்டிகள் ஆடியுள்ள லக்னோ, 10 புள்ளிகள் பெற்றுள்ளதால், மீதமுள்ள ஐந்தில் நான்கிலாவது வெற்றி பெற முனைப்பு காட்ட வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

-Advertisement-

இந்த தோல்விக்கு பின் பேசியிருந்த லக்னோ கேப்டன் கே எல் ராகுல், “நாங்கள் இருபது ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம் என நினைக்கிறேன். சிறப்பான துவக்கத்தை கொடுக்கவில்லை என்றபோதும் நானும் ஹூடாவும் இணைந்து நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தோம். இது போன்ற போட்டிகளில் 50 முதல் 60 ரன்கள் அடித்து செட்டாக இருக்கும் பேட்ஸ்மேன்கள், 100 ரன்களுக்கு நெருக்கமாக ரன்கள் சேர்க்க வேண்டும்.

15 ஓவர்களில் 150 ரன்களை நாங்கள் அடித்திருந்தால் அது இன்னும் எங்களுக்கு உதவியிருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் அதிக சிக்ஸர்கள் அடிக்கும் அணி எளிதாக வெற்றி பெறும் என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. நாங்களும் அதிக சிக்ஸர்களை அடித்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு விக்கெட்டுகள் சீக்கிரமாக எழுந்ததால் அந்த முடிவை மாற்றி விட்டோம். நான் இருபது ரன்களும், ஹூடா இன்னும் 20 ரன்களும் சேர்த்திருந்தால் 220 ரன்கள் வரையும் நாங்கள் எட்டி இருக்கலாம். அது மிகப்பெரிய வித்தியாசத்தை காட்டி இருக்கும்.

அனைத்து வீரர்களுமே அதிரடியாக ஆடி ரன் அடித்து வருவதால் நாங்களும் அதிலிருந்து வித்தியாசப்படாமல் அதனைத் தான் விரும்புகிறோம். எங்கள் அணியில் பவர் ஹிட்டர்களாக ஸ்டாயின்ஸ் மட்டும் பூரன் உள்ளனர். மற்ற வீரர்கள் சிறப்பான பகுதியை தேர்ந்தெடுத்து நல்ல ஷாட்களை அடிக்கின்றனர். அமித் மிஸ்ரா மிகவும் அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர். அவர் இதுபோன்ற பவுண்டரி நீளமுள்ள மைதானத்தில் சிறப்பாக செயல்பட கூடியவர்.

ராஜஸ்தான் அணி அடிக்க தொடங்கிவிட்டதும் எங்கள் பந்துவீச்சாளர்கள் மீது நெருக்கடியை போட தொடங்கி விட்டனர். க்ருனால் பாண்டியா இரண்டு, மூன்று ஓவர்கள் சிறப்பாக வீசி அவர்களை கட்டுப்படுத்திய போதும் மற்ற பந்து வீச்சாளர்கள் ஓவரில் ரன் அடித்து விட்டனர். அதேபோல ரோமன் போவெல் மற்றும் ஹெட்மயர் வருவார்கள் என்பதால் அது மாதிரியான பவர் ஹிட்டர்களுக்கு சிறப்பாக பந்து வீசும் ரவி பிஷ்னாய்க்கு அதிக ஓவர்கள் கொடுக்காமல் இருந்து விட்டேன்” என கே எல் ராகுல் கூறினார்.

-Advertisement-

சற்று முன்