- Advertisement 3-
Homeவிளையாட்டுஅடுத்த மேட்ச்ல தான் சம்பவமே.. இந்தியாவ தோக்கடிச்ச திருப்தி.. செம உற்சாகத்தில் தெ. ஆ கேப்டன்...

அடுத்த மேட்ச்ல தான் சம்பவமே.. இந்தியாவ தோக்கடிச்ச திருப்தி.. செம உற்சாகத்தில் தெ. ஆ கேப்டன் மார்க்ரம்

- Advertisement 1-

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், தெ. ஆ அணி 116 ரன்களில் ஆட்டமிழந்து மோசமான தோல்வியையும் தழுவி இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக அந்த அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தது தான் என கேப்டன் மார்க்ரம் தெரிவித்திருந்தார். அதே போல, இனி வரும் போட்டிகளில் டாஸ் வென்றால் பந்து வீச்சைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் சொன்னது போலவே, இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற அவர், திட்டம் போட்டு பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரன் சேர்க்கவே நிலை தடுமாறியது. சாய் சுதர்சன் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் அரைசதமடித்திருந்த போதிலும் மற்ற வீரர்களின் பங்களிப்பு சிறப்பாக இல்லாததால் இந்திய அணியால் பெரிய அளவில் ரன் சேர்க்க முடியவில்லை.

இதனால், 47 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, வெறும் 211 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய தெ. ஆ அணி, நிதான ஆட்டத்தை கடைபிடிக்க டோனி டி சோர்ஸி சதமடித்தார். எந்தவித பரபரப்பும் இல்லாமல் போட்டி தெ. ஆ பக்கமே இருக்க, கடைசியில் அவர்கள் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று தொடரையும் சமன் செய்துள்ளனர்.

இந்த வெற்றிக்கு பின்னர் உற்சாகத்துடன் பேசிய தெ. ஆ கேப்டன் மார்க்ரம், “கடந்த போட்டியை விட சிறந்த முறையில் முன்னேறி இருக்கிறோம். அனைவருமே சிறந்த பங்களிப்பை அளித்தார்கள். எங்களின் தொடக்க வீரர்கள் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியை எங்கள் பக்கம் ஈர்த்தது சிறப்பாக இருந்தது. நாங்கள் பந்து வீசிய போது காற்றும் அதிகமாக இருந்தது. பந்து வீச்சின் மூலம் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று தான் நினைப்போம்.

- Advertisement 2-

இங்கே பேட்டிங் செய்வது கடினமான ஒன்றாக தான் தோன்றுகிறது. இதனால், 270-க்கு மேல் அடித்தாலே அது நல்ல ஸ்கோராக இருக்கும் என கருதுகிறேன். டோனி டி சோர்ஸி மிகப்பெரிய பங்களிப்பை அளித்தார். அவர் சதமடித்த போது அங்கே இருந்த ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, எங்களை பிரம்மிக்க வைத்தது. மேலும் அவரது பேட்டிங் பார்க்கவும் சிறப்பாக இருந்தது.

முதல் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆனால், இந்த போட்டியில் தன்னம்பிக்கையாக இலக்கை எட்டிப் பிடித்தது, இன்னும் அதிக நம்பிக்கையான அணியாக மாறி இருப்பதாக நான் கருதுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இரு அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை (21.12.2023) நடைபெறுகிறது.

சற்று முன்