- Advertisement 3-
Homeவிளையாட்டுஅதை நம்புனது தப்பா போச்சு.. முதல் போட்டியில் நடந்த அதே பிரச்சனை.. ஏமாந்து போன தெ....

அதை நம்புனது தப்பா போச்சு.. முதல் போட்டியில் நடந்த அதே பிரச்சனை.. ஏமாந்து போன தெ. ஆ மார்க்ரம்..

- Advertisement 1-

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வென்ற போது, கே எல் ராகுல் தலைமையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகள் பெற்ற அணி என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்திருந்தது. ஆனால், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் கேப்டனாக கே எல் ராகுல் பெற்ற வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் தொடரை வெற்றி பெறும் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து, தற்போது நடந்து முடிந்துள்ள 3 வது ஒரு நாள் போட்டியில், அணி வென்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 108 ரன்களும், திலக் வர்மா 52 ரன்களும் எடுத்திருந்தனர். இறுதியில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்களையும் 50 ஓவர்களில் இந்திய அணி சேர்த்திருந்தது.

இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய தெ. ஆ அணியின் தொடக்க வீரர் சோர்ஸி கடந்த போட்டியை போல இந்த போட்டியிலும் சதமடித்து அசத்தினார். இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருந்ததால் போட்டியும் பரபரப்பாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் தனியாளாக போராடிய சோர்ஸி அவுட்டானதும் இந்தியா தான் வெற்றி பெறும் என்பது உறுதியாகி விட்டது.

கடைசி ஐம்பது ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்த தெ. ஆ அணி, 218 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணியும் சுலபமாக வெற்றி பெற்று தொடரையும் சொந்தமாக்கியது. தங்களது மண்ணிலேயே ஒரு நாள் தொடரை இழந்த ஏமாற்றத்தில் பேசிய தெ. ஆ கேப்டன் மார்க்ரம், “தொடரை வெல்வதற்கு நாங்கள் தயாராக தான் இருந்தோம். தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்த போட்டியில் சிறந்த மைதானம் மற்றும் ரசிகர்கள் கூட்டம் இருந்தும் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம்.

- Advertisement 2-

மைதானம் போட்டி முழுக்க பெரிதாக மாறவே இல்லை. 290 ரன்களை எட்டிப் பிடித்து விடலாம் என்று தான் நினைத்தோம். நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். ஆனால் டாஸ் இன்று முக்கிய பங்கு வகித்ததா என்பது தெரியவில்லை. அடுத்து வரும் டெஸ்ட் தொடருக்காக உற்சாகத்துடன் உள்ளோம். இரண்டு அற்புதமான மைதானங்களில் நடக்க உள்ள போட்டியில் இதை விட வேறு ஒன்றும் சிறப்பாக அமைந்து விடாது” என தெரிவித்துள்ளார்.

மூன்று போட்டிகளிலும் டாஸ் வென்ற தெ. ஆ கேப்டன் மார்க்ரம் முதல் போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்ய போட்டியிலும் அவர்கள் தோல்வி அடைந்தனர். இதனால், இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற மார்க்ரம், பந்து வீச்சை தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். அப்படி இருக்கையில் 3 வது போட்டியிலும் அவர் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், சிறந்த பேட்டிங் அமையாமல் போக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்