- Advertisement -
Homeகிரிக்கெட்அண்ணைக்கு தோனி கூல் பண்ணாரு... இன்னைக்கு யாரும் இல்ல.. அணியில் இருந்து துக்கப்பட்ட பத்திரனா.. காரணம்...

அண்ணைக்கு தோனி கூல் பண்ணாரு… இன்னைக்கு யாரும் இல்ல.. அணியில் இருந்து துக்கப்பட்ட பத்திரனா.. காரணம் என்ன?

-Advertisement-

இந்தியாவில் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. அதேவேளையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற அணிகள் ஆரம்பத்திலேயே தோல்விகளை சந்தித்து பின்தங்கி உள்ளன.

அதிலும் குறிப்பாக இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இன்னும் புள்ளி பட்டியலில் எந்த புள்ளிகளையும் பெறாமல் எட்டாவது மற்றும் பத்தாவது இடத்தை பிடித்துள்ளனர். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான உலகக் கோப்பை லீக் தொடரின் 14-ஆவது லீக் போட்டி லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இலங்கை அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா இடம்பெறாதது அனைவரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அவர் ஏன் விளையாடவில்லை? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அந்த வகையில் அதற்கான காரணத்தை நாம் பார்க்கையில் : இளம் வீரரான பதிரானா ஓவருக்கு 7 ரன்கள் மேல் விட்டுக் கொடுக்கிறார் என்பது மட்டுமின்றி அதிக அளவில் போட்டிகளின் போது வொயிடுகளை வீசுகிறார்.

டி20 கிரிக்கெட்டில் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசுவதால் மிடில் ஓவர்களில் இரண்டு ஓவர்களும், டெத் ஓவர்களில் இரண்டு ஓவர்களும் என கச்சிதமாக வீசிவிட்டு செல்லும் அவர் 50 ஓவர் போட்டிகளில் 10 ஓவர்கள் வீசும் அளவிற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்.

-Advertisement-

அதோடு தோனி போன்ற ஒரு கேப்டனும் அவருடன் இல்லாதது ஒரு மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் அதிக அளவு உதிரிகளை வழங்கினாலும் சென்னை அணியில் இருக்கும் போது தோனி அவரிடம் சென்று அவரை ஆசுவாசப்படுத்தி சில அறிவுகளை கூறி மீண்டும் நன்றாக செயல்பட வைப்பார்.

இலங்கை அணியை பொறுத்தவரை அவர் எப்படி பந்து வீசினாலும் அவரிடம் சென்று யாரும் பேசுவதில்லை. அதனால் அழுத்தத்தை சந்திக்கும் அவர் மேலும் தொடர்ச்சியான மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார். இப்படி அதிக ரன்கள் கொடுப்பதனாலும், அதிக உதிரிகளை வழங்குவதன் காரணமாகவே அவர் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்