- Advertisement 3-
Homeவிளையாட்டுசிஎஸ்கே பலம் இல்லாத டீமா இருந்தாலும்.. அவரு ஒருத்தர் இருந்தா ஜெயிச்சுடலாம்.. மொயீன் அலி கைகாட்டிய...

சிஎஸ்கே பலம் இல்லாத டீமா இருந்தாலும்.. அவரு ஒருத்தர் இருந்தா ஜெயிச்சுடலாம்.. மொயீன் அலி கைகாட்டிய வீரர்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் இன்னும் ஒன்று ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முடிந்து விடும் என தெரியும் நிலையில் அடுத்ததாக ஐபிஎல் தொடரை வரவேற்கவும் ரசிகர்கள் தயாராகி விட்டனர். இதில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட சில அணிகள் ஏற்கனவே ஐபிஎல் தொடருக்கான பயிற்சியையும் ஆரம்பித்துவிட்டது. அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது.

நடப்பு சாம்பியனாக இருக்கும் அவர்கள் இளம் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்கள் என இரண்டும் சிறந்த கலவையாக அணியில் இருக்கின்றது. அதே ஃபார்ம் இந்த ஆண்டும் தொடரும் பட்சத்தில் கோப்பையைத் தட்டி தூக்குவதற்கான திட்டங்களையும் தோனி வகுத்து வருவதாக தெரிகிறது.

அது மட்டுமில்லாமல் தோனியின் கடைசி சீசன் என்ற ஒரு தகவலும் பரவலாக இருப்பதால் அவர்கள் நிச்சயம் கோப்பையுடன் தான் விடைபெற வேண்டும் என்பதும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படி சிஎஸ்கேவை சுற்றி பல மடங்கு எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில் அதனை தோனி பூர்த்தி செய்வதற்கான வழிகளில் இறங்கியாக வேண்டும் என்ற நெருக்கடியும் எழாமல் இல்லை.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரான மொயீன் அலி தோனி மற்றும் சிஎஸ்கே குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த 3 சீசன்களாக சிஎஸ்கே அணிக்காக ஆடி வரும் மொயீன் அலி, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் நல்ல பங்களிப்பை அளித்துள்ளார்.

- Advertisement 2-

இவர் தற்போது ஐபிஎல் தொடர் பற்றி பேசுகையில், “தோனி ஒரு ஸ்பெஷல் வீரர் மற்றும் கேப்டன் என்பது அனைவருக்குமே தெரியும். நான் மூன்று சீசன்கள் அவருடன் ஆடியிருக்கிறேன். ஆனாலும் எப்படியான திட்டங்களுடன் அவர் வருவார் என்பதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. உங்களுக்காக என்ன ரோலை அவர் வைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்கே அந்த அளவுக்கு ஆர்வம் இருக்கும்.

சிஎஸ்கே அணியில் கேப்டனாக தோனி இருக்கும் போது நீங்கள் ஆடும் பட்சத்தில் அணி பலவீனமாக இருந்தாலும், பலமாக இருந்தாலும் உங்களால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக தான் எப்போதுமே இருக்கும்” என மொயீன் அலி உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் கலந்து கொள்ள வந்த கேப்டன் தோனி தொடர்பாக வெளியாகி இருந்த வீடியோக்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்