- Advertisement 3-
Homeவிளையாட்டுமத்த டீம் இத செய்ய மாட்டாங்க. வீரர்கள் சரியா ஆடலனாலும் சிஎஸ்கே-ல இது தான் நடக்கும்....

மத்த டீம் இத செய்ய மாட்டாங்க. வீரர்கள் சரியா ஆடலனாலும் சிஎஸ்கே-ல இது தான் நடக்கும். மொயின் அலி பேச்சு

- Advertisement 1-

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சீராக விளையாடும் அணிகளில் ஒன்றாகும். ஐபிஎல் சீசனின் அனைத்துக் காலகட்டத்திலும் சிறந்த வீரர்களைப் பெறுவதில் சிஎஸ்கே கைதேர்ந்த அணியாக உள்ளது. மேலும் திறமையான வீரர்கள் ஃபார்ம் அவுட்டில் இருந்தாலும், அவர்களை அணிக்குள் எடுத்து வாய்ப்புகளை வழங்கி அவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை பெறுவதிலும் அந்த அணி சிறந்து விளங்குகிறது.

மற்ற அணிகளில் சரியாக விளையாடாத ஷிவம் துபே, அஜிங்யா ரஹானே போன்ற வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு வந்து ஃபார்முக்கு திரும்பியுள்ளதை நாம் அறிவோம். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் லீக் போட்டிகள் முடிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. இன்று நடக்க  உள்ள முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில்தான் அந்த அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான மொயின் அலி, மற்ற அணிகளிடம் இருந்து சிஎஸ்கேவை எது தனித்துக் காட்டுகிறது என்பது பற்றி பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் “கேப்டனாக இருக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் தோனியைப் பல வழிகளில் தனித்துக் காட்டுவது என்னவெனில், அவர் வீரர்கள் மேல் வைக்கும் நம்பிக்கை மற்றும் அவர்களுக்குக் கொடுக்கும் வாய்ப்புகள்தான்.

மற்ற அணிகளில் வீரர்கல் முதல் இரண்டு ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை என்றால் அவர்கள் உடனே அந்த வீரரை குறை சொல்லி பென்ச்சில் உட்காரவைக்க முயல்வார்கள். அங்குதான் தோனி மாறுபடுகிறார்.அவர் வீரர்களிடம் உள்ள திறமைகளை நம்புகிறார். அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து போதுமான ஆட்டங்களில் விளையாட வைக்கிறார். அதைப் பல அணிகள் செய்வதில்லை.

- Advertisement 2-

வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளை அவர்கள் வழங்குவதில்லை. இதுமாதிரி முடிவுகள் எடுப்பதில் கேப்டனின் பங்கு முக்கியமானது. இப்படி நாம் வாய்ப்புகளை வழங்கும் போது வீரர்கள் நாம் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக செயல்படுவார்கள்” என்று சிஎஸ்கே அணியின் வெற்றி ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார் ஆல்ரவுண்டர் மொயின் அலி.

இதையும் படிக்கலாமே: 3 முறையும் சிஎஸ்கே-வ வச்சு செஞ்ச குஜராத் டைட்டன்ஸ். இந்த முறை சிஎஸ்கே-விற்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?

மொயின் அலி 3 சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு பயணிக்கிறார். அவர் போதுமான ஆட்டங்களில் சிஎஸ்கேவுக்கு சிறப்பாக செயல்பட்டு பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் திறம்பட செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்