- Advertisement -
Homeகிரிக்கெட்களத்தில் மீண்டும் நடிப்பை போட்ட ரிஸ்வான்... உடனே சுதாரித்து கலாய்த்த விராட் கோலி.. இது என்ன...

களத்தில் மீண்டும் நடிப்பை போட்ட ரிஸ்வான்… உடனே சுதாரித்து கலாய்த்த விராட் கோலி.. இது என்ன ஸ்ரீலங்கா டீமா? என விளாசும் ரசிகர்கள்

-Advertisement-

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி துவங்கிய 13-வது ஐசிசி 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 12-வது முக்கியமான லீக் போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஏகப்பட்ட சுவாரஸ்யமான விடயங்கள் மைதானத்தில் அரங்கேறியது ரசிகர்கள் மத்தியிலும் சுவாரசியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. அந்த வகையில் இன்றைய போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் செய்த ஒரு செயலுக்கு விராட் கோலி கொடுத்த பதிலடி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்த விடயமாக மாறியுள்ளது.

அந்த வகையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 41 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் துவக்க வீரரான அப்துல்லா ஷபிக் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பின்னர் மற்றொரு துவக்க வீரரான இமாம் உல் ஹக்கும் 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது களத்தில் இருந்த கேப்டன் பாபர் அசாமுடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக விளையாட வந்த முகமது ரிஸ்வான் மைதானத்தில் பேட்டிங்கை துவங்குவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொண்டார்.

குறிப்பாக எந்த ஒரு புது பேட்ஸ்மேனும் களத்திற்கு வந்தால் அம்பயரிடம் உதவி கேட்டு கார்டு எடுத்துக்கொண்டு விளையாடுவார்கள். ஆனால் இன்றைய போட்டியில் களத்திற்கு வந்த ரிஸ்வான் எதிர்புறம் இருந்த பேட்ஸ்மேனிடமோ அல்லது அம்பயரிடமோ உதவி கேட்காமல் தானாக ஸ்டம்பை சரி பார்த்து கார்டு எடுத்துக் கொண்டது மட்டுமின்றி தரையில் உட்காருவதும், உரசுவதும், எழுந்திருப்பதுமாக பேட்டிங்கை துவங்குவதற்கு சற்று கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார்.

-Advertisement-

அதனால் அவர் உள்ளே வந்தும் பவுலர் அடுத்த பந்தினை வீச அதிகநேரம் பிடித்தது. இப்படி ரிஸ்வான் செய்ய காரணம் யாதெனில் : பவுலர் விக்கெட் எடுத்த முமென்ட்டத்துடன் உடனே அடுத்த பந்தினை வீசினால் அவருடைய வீரியம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதனால் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு அவரது கவனத்தை திசை திருப்பவே இப்படி எல்லாம் ரிஸ்வான் நேரம் எடுத்துக் கொண்டார். இதனை கவனித்த விராட் கோலி, கையில் கடிகாரம் கட்டாத போதிலும் கடிகாரத்தை பார்ப்பது போன்று எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வீர்கள் என்பது போன்று அடிக்கடி கையை பார்த்து நேரத்தை குறிக்கும் வகையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரியாக்ஷன் கொடுத்தார்.

மேலும் ரிஸ்வான் இதுபோன்று செய்வது புதிதல்ல என்றும் அவர் செய்யும் சேட்டைகள் அதிகம் என்றும் ரசிகர்கள் இந்த செயலுக்கு பதிலளித்து வருகின்றனர். ஏனெனில் கடந்த போட்டியில் கூட ரிஸ்வான் சதம் அடிப்பதற்கு முன்னதாக தசைப்பிடிப்பு வந்தது போல் நடித்ததும், பின்னர் போட்டி முடியும் வரை விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றபோது : சில நேரங்களில் வலி இருந்ததாகவும், சில நேரங்களில் நடித்ததாகவும் அவரே கூறியது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்