- Advertisement 3-
Homeவிளையாட்டுபிளே ஆப் கனவு கண்ட ஹைதராபாத்திற்கு ஆப்பு வைத்த சூர்யகுமார்.. ஆர்சிபிக்கும் மும்பை வைத்த செக்..

பிளே ஆப் கனவு கண்ட ஹைதராபாத்திற்கு ஆப்பு வைத்த சூர்யகுமார்.. ஆர்சிபிக்கும் மும்பை வைத்த செக்..

- Advertisement-

நடப்புத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் கூட மற்ற அணிகளின் பிளே ஆப் வாய்ப்புக்கும் ஆப்பு வைக்கும் வகையில் ஆடி வருவதாகவே தெரிகிறது. சமீபத்தில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதி இருந்தது.

பத்து போட்டிகள் ஆடி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இனி வரும் ஒவ்வொரு வெற்றிகளும் மிக முக்கியம். இப்படி ஒரு சூழலில் தான் அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டிருந்தனர்.

- Advertisements -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் ஹெட் 30 பந்துகளில் ஏழு ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்சர்களுடன் 48 ரன்கள் அடித்திருந்தார். இதன் பின்னர் வந்த எந்த வீரர்களும் ரன் சேர்க்காத நிலையில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 17 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு ஃபோர்களுடன் 35 ரன்கள் சேர்த்து தனது அணி 160-ஐ கடக்க உதவி இருந்தார்.

இதேபோல மும்பை அணியின் பந்துவீச்சும் இந்த போட்டியில் சிறப்பாக இருந்தது. ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும், பியூஷ் சாவ்லா நான்கு ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் எடுக்க பும்ரா நான்கு ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

- Advertisement-

இதனால் அதிரடி பேட்டிங் நிறைந்த ஹைதராபாத் அணியை 173 ரன்களிலும் அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கும் ஆரம்பத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. இஷான் கிஷன் 9 ரன்களிலும், ரோஹித் சர்மா நான்கு ரன்களிலும், நமன் திர் டக் அவுட்டுமாக 31 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்திருந்தது.

ஆனால் இதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்ததால் மும்பை அணி வெற்றி பாதையை நோக்கி நடை போட்டு இருந்தது. இறுதியில் 17.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்த மும்பை அணி, 12 வது போட்டியில் 4 வது வெற்றியையும் பதிவு செய்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 12 ஃபோர்களுடன் 102 ரன்கள் அடித்திருந்தார்.

அவருடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா 37 ரன்களுடன் அவுட்டாகாமல் இருக்க, இருவரும் இணைந்து 143 ரன்களை சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், இந்த தோல்வியின் காரணமாக ஹைதராபாத் அணியின் பிளே ஆப் வாய்ப்பும் எதிர்பார்த்ததை விட தள்ளிப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்