- Advertisement -
Homeகிரிக்கெட்இது ஐசிசி நடத்திய போட்டி மாதிரியே தெரியல... பிசிசிஐ நடந்தன மாதிரி இருக்கு... பாக் அணிக்கு...

இது ஐசிசி நடத்திய போட்டி மாதிரியே தெரியல… பிசிசிஐ நடந்தன மாதிரி இருக்கு… பாக் அணிக்கு ஆதரவா ஒன்னு கூட பண்ணல – பாக் கோச் அதிரடி பேட்டி

-Advertisement-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியானது விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் சொற்ப ரன்களில் அணைத்து விக்கட்டுகளையும் இழந்ததன் மூலம் இந்திய அணி மிக எளிதாக பாகிஸ்தான் அணியை தோற்கடித்து, உலகக்கோப்பை போட்டிகளில் எட்டாவது முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் ரோஹித் சர்மா. அவர் இந்திய அணியின் பவுலர்கள் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. சர்துல் தாக்குரை தவிர இந்திய அணி சார்பாக பந்து வீசிய அத்தனை பவுலர்களும் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதிலும் குறிப்பாக பும்ரா ஏழுஓவரை வீசி வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே அடித்தது.

அடுத்து பேட்டிங் ஆட களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே வான வேடிக்கைகளை காட்டத் துவங்கியது. ஏற்கனவே நல்ல ஒரு பார்மில் இருந்த ரோகித் சர்மா மீண்டும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார். அவர் நிச்சயம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து வெளியேறினார் அதில் 6 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடக்கம்.

-Advertisement-

அதேபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும், கில்லும் 16 ரன்களில் வெளியேற ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் எடுத்தார். இப்படியாக 30.3 ஓவர்களில் இந்திய அணி மூன்று விக்கட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் அடித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த நிலையில் அந்த அணியின் கோச் மிக்கி ஆர்த்தர் பேசுகையில்,

இது ஒரு ஐசிசி நடத்தும் போட்டி மாதிரி தெரியவில்லை. இது பிசிசிஐ நடத்தும் பைலேட்டரல் சீரியஸ் மாதிரி தான் இருந்தது. மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக “தில் தில் பாகிஸ்தான்” போன்ற எந்த ஒரு வார்த்தையும் ஒலிக்கவில்லை. இது போன்ற விடயங்கள் நிச்சயம் களத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் அதை நான் சாக்காக கூற விரும்புவதில்லை. ஏனென்றால் அது அந்த தருணத்தை பற்றியது, அடுத்த பந்தைப் பற்றியது. மேலும் நாங்கள் இந்திய அணியை எப்படி எதிகொள்கிறோம் என்பதை பற்றியது என்று அவர் கூறியுள்ளார்.

-Advertisement-

சற்று முன்