- Advertisement -
Homeகிரிக்கெட்களத்தில் பந்திற்கு மந்திரம் போட்டாரா பாண்டிய? பட்டுனு விழுந்த விக்கெட்... நடந்தது என்ன? அவர் கொடுத்த...

களத்தில் பந்திற்கு மந்திரம் போட்டாரா பாண்டிய? பட்டுனு விழுந்த விக்கெட்… நடந்தது என்ன? அவர் கொடுத்த விளக்கம்

-Advertisement-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் மூலம் இந்தியா எட்டாவது முறையாக பாகிஸ்தான் அணியை உலக கோப்பை போட்டிகளில் தோற்கடித்து தனது பலத்தை நிரூபித்துள்ளது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அதன் ஓப்பனிங் வீரர்கள் ஆரம்பத்தில் சற்று அடித்து ஆடுவது போல் தெரிந்தாலும், தங்களது விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் விட்டனர்.

பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானை தவிர வேறு யாரும் பெரிதாக ரன்களை சேர்க்கவில்லை. பாபர் அசாம் 50 ரன்களும் முகமது ரிஸ்வான் 49 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். இதன் காரணமாக அந்த அணி 42.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனை தொடர்ந்து பேட்டிங் ஆட வந்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. ரோஹித் சர்மாவை பாகிஸ்தான் பவுலர்களால் சமாளிக்கவே முடியவில்லை. மறுபடியும் கில்லும் சிறப்பாக ஆடினாலும் அவர் 16 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கோலியும் 16 ரகங்களில் வெளியேறினார்.

-Advertisement-

அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஷ்ரேயஸ் ஐயர் 53 ரன்கள் எடுத்தார். 30.3ஓவர்களில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்களை அடித்து போட்டியில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்த போது அந்த அணியின் ஓபனிங் வீரர்களில் ஒருவரான இமாம் உல்-அக்கிற்கு ஹர்திக் பாண்டியா பந்து வீச வந்தார். அப்போது அவர் பந்தை கையில் வைத்துக் கொண்டு ஏதோ மந்திரத்தை ஜெபிப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து ஆட்டம் முடிந்த பிறகு அது குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,

நான் பந்தை கையில் வைத்துக் கொண்டு என்னை நானே உற்சாகப்படுத்தும் வகையில் சில வார்த்தைகளை கூறிக்கொண்டேன். பந்தை சரியான இடத்தில் போட வேண்டும் என்றும், தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். மற்றபடி அது மந்திரம் எல்லாம் இல்லை என்று ஹர்திக் பாண்டியா சிரித்தபடியே இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்