- Advertisement -
Homeகிரிக்கெட்அவுட் ஆன விரக்தி.. பவுண்டரி ரோப்பை உதைத்து, சேரை பேட்டால் அடித்த குர்பாஸ்.. நடந்தது என்ன?

அவுட் ஆன விரக்தி.. பவுண்டரி ரோப்பை உதைத்து, சேரை பேட்டால் அடித்த குர்பாஸ்.. நடந்தது என்ன?

-Advertisement-

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் போட்டியானது அக்டோபர் 15-ஆம் தேதி இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்தது. அந்த வகையில் முதலில் விளையாடிய அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்களை குறித்துள்ளது.

இதன் காரணமாக 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் மிகச் சிறப்பான துவக்கத்தை கண்ட ஆப்கானிஸ்தான் அணி 114 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் நல்ல நிலையில் இருந்தது.

ஆனால் அதற்கு அடுத்த 8 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை அந்த அணி அடுத்தடுத்து இழந்தது பெரிய சறுக்கலை சந்தித்தது. அதிலும் குறிப்பாக முதல் விக்கெட்டாக துவக்க வீரர் இப்ராஹீம் ஜார்டான் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேற பின்னர் இரண்டாவது விக்கெட்டாக ரஹ்மத் ஷா 3 ரன்களில் ஆட்டமிழந்தார் அப்போது ஆப்கனிஸ்தான் அணி 122 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது.

இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே துவக்க வீரர் குர்பாஸ் உடன் அந்த அணியின் கேப்டன் ஷாகிதி இணைந்தார். இருவரும் இன்னிங்சை நிலைப்படுத்தி பெரிய ரன் குவிப்பிற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 57 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸை அந்த அணியின் கேப்டன் ஷாகிதி தேவையற்ற அழைப்பின் மூலம் ரன் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

-Advertisement-

அதன்படி 19-வது ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட ஷாகிதி தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எடுக்க ஆசைப்பட்டு கவர் திசையில் பந்தை தட்டிவிட்டு ஓடினார். ஆனால் பந்தினை சரியாக படித்த டேவிட் வில்லி அதனை சரியாக விக்கெட் கீப்பரிடம் த்ரோ செய்யவே 80 ரன்கள் எடுத்திருந்த குர்பாஸ் வெளியேறினார். 57 பந்துகளிலேயே 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 80 ரன்கள் எடுத்து அசத்தலாக ஆடிக் கொண்டிருந்த குர்பாஸ் நிச்சயம் முதல் ஆப்கானிஸ்தான் வீரராக உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இப்படி அணியின் கேப்டன் செய்த தவறால் ஆட்டமிழந்த விதத்தை ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தனக்கு கிடைத்த வாய்ப்பை இழந்த வருத்தத்தில் பெவிலியனை நோக்கி திரும்பிய குர்பாஸ் கடுமையான கோபத்துடன் வெளியேறினார். தனது விக்கெட் இவ்வளவு எளிதில் விழுந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் பவுண்டரி எல்லையை கடக்கும் போது அங்கிருந்த ரோப்பை பேட்டால் அடித்தது மட்டுமின்றி ஓய்வறையில் இருந்த சேரையும் தனது பேட்டால் தாக்கினார்.

-Advertisement-

சற்று முன்