- Advertisement 3-
Homeவிளையாட்டுஇஷான் கிஷனுக்கு இனிமே விருப்பம் இருந்தா.. ஒதுங்கி இருக்கும் இளம் வீரர்.. எங்க போய் முடிய...

இஷான் கிஷனுக்கு இனிமே விருப்பம் இருந்தா.. ஒதுங்கி இருக்கும் இளம் வீரர்.. எங்க போய் முடிய போகுதோ..

- Advertisement 1-

ஏற்கனவே இந்திய அணியில் அதிக இளம் வீரர்கள் ஆடி வரும் சூழலில், இரு தரப்பு தொடர்களுக்கே வீரர்களைத் தேர்வு செய்வதில் தொடர்ந்து சவாலாக தான் இருந்து வருகிறது. டெஸ்ட் தொடர்கள் வரை இளம் வீரர்கள் அதிகம் இருப்பதால், பல சீனியர் வீரர்களுக்கே இந்த பார்மட்டில் வாய்ப்பு கிடைப்பது அரிதாகி விட்டது. இதன் பெயரில் இனி வரும் தொடர்களிலும் இதே போன்ற சிக்கலும், சவாலும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தான் தெரிகிறது.

அத வகையில் இந்திய அணியின் அசத்தலான வீரராக இருந்து வந்த இஷான் கிஷன், கடந்த பல தொடர்களாகவே அணியில் இடம் பிடிக்காமல் இருந்து வருகிறார். உலக கோப்பைத் தொடரில் கூட அவர் இடம்பிடித்திருந்த போதும், இரண்டே போட்டிகளில் ஆடும் வாய்ப்பு மட்டும் தான் இஷான் கிஷனுக்கு கிடைத்திருந்தது.

அதன் பிறகு, சில காரணங்களால் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து விலகிய இஷான் கிஷன், தனக்கு அதிக அழுத்தம் இருப்பதாகவும், மனச்சோர்வுக்காக அவர் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டி விலகி இருப்பதாக தகவல்களும் வெளியானது. இதனால், ரஞ்சி தொடரில் அவர் மீண்டும் ஆட தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அவர் ஆடாமல் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடர் வரைக்கும் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருந்து வருகிறது.

இதனால், பிசிசிஐக்கும் இஷான் கிஷனுக்கும் விரிசல் என்றும் இனி அவருக்கு வாய்ப்பு கிடைப்பதே கஷ்டம் தான் என்பது போன்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி இருந்தது. இது பற்றி பல முறை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்த நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு முறை இது பற்றி பேசியுள்ளார்.

- Advertisement 2-

இந்திய அணியில் இடம்பிடித்து ஆடி வரும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத், ரன் அடிக்கத் திணறுவதால் இஷான் கிஷனை ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர். இது பற்றி பேசிய டிராவிட், “இஷான் கிஷன் பற்றி பல முறை நான் விளக்கம் கொடுத்து விட்டேன். அவர் ஓய்வு வேண்டும் என கேட்டதால் நாங்களும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்று விடுப்பு கொடுத்து விட்டோம்.

அவர் எப்போது தயாராக இருக்கிறாரோ அப்போது முதல் தர கிரிக்கெட் ஆடி விட்டு திரும்ப வர வேண்டும் என சொல்லமாட்டேன். ஆனால், கொஞ்சம் கிரிக்கெட்டை பயிற்சி செய்து விட்டு திரும்ப வரலாம். அவரோட விருப்பம் தான். அவரிடம் நாங்கள் எதையும் செய்தே தீர வேண்டுமென அழுத்தம் கொடுக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.

அதே போல, இளம் வீரர் கேஎஸ் பரத் பார்ம் அவுட் பற்றி தற்போதே பேச வேண்டாம் என்றும் இளம் வீரராக அவர் இருப்பதால் நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்