- Advertisement 3-
Homeவிளையாட்டுநானும் ரோஹித்தும் தான் காரணமா.. ஷ்ரேயஸ், இஷான் கிஷனுக்கு பின்னால் இருந்த விஷயம்.. மௌனம் கலைத்த...

நானும் ரோஹித்தும் தான் காரணமா.. ஷ்ரேயஸ், இஷான் கிஷனுக்கு பின்னால் இருந்த விஷயம்.. மௌனம் கலைத்த டிராவிட்..

- Advertisement 1-

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றிருந்தாலும் இன்னொரு பக்கம் சில பரவலான விமர்சன கருத்துக்கள் தொடர்ந்து இந்திய வீரர்களை சுற்றி இருந்து தான் வருகிறது. தென்னாப்பிரிக்க தொடரில் இருந்தே இந்திய அணியில் சேராமல் இருந்து வருகிறார் இளம் வீரர் இஷான் கிஷன். மனச்சோர்வு காரணமாக ஓய்வு பெற்றிருந்த இவர் அதன் பின்னர் இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவது பற்றி பிசிசிஐயிடம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது.

ஆனால் அதே வேளையில் டிஒய் படேல் என்ற உள்ளூர் தொடரிலும் களமிறங்கி இருந்த இஷான் கிஷன், பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இன்னொரு பக்கம் இஷான் கிஷனை போல மற்றொரு வீரரான ஷ்ரேயஸ் ஐயர், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருந்தார். ஆனால் அந்த இரண்டு போட்டிகளிலும் அவர் சிறப்பாக ஆடாத காரணத்தினால் மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வாகவில்லை என்று தெரிகிறது.

அப்படி ஒரு நிலையில் அவரும் ரஞ்சித் தொடரில் ஆட தயாராகி வந்த நிலையில் காயம் காரணமாக விலகியதாக அறிவித்திருந்தார். ஆனால் அவரது மருத்துவ அறிக்கையில் அவருக்கு காயம் எதுவும் இல்லை என்ற தகவலும் வெளியாகியதால், ரஞ்சித் தொடரில் ஆடாமல் இருப்பதற்காக ஷ்ரேயாஸ் பொய் சொன்னாரா என அந்த சம்பவமும் பூதாகரமாக வெடித்திருந்தது.

இதற்கிடையில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகிய இருவரின் பெயரும் பிசிசியின் 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான சம்பள பட்டியலில் இடம்பெறாமலும் போனது. இதனால் அவர்கள் ஏதோ தவறு செய்தார்கள் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வர, இன்னொரு பக்கம் நிச்சயம் விரைவில் தங்களது ஃபார்மை நிரூபித்து அவர்கள் மீண்டும் சம்பள பட்டியலில் இடம் பெறுவார்கள் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement 2-

இந்த நிலையில் இது பற்றி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “உள்ளூர் போட்டியில் ஆடும் அனைவருக்குமே இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் யாரும் சம்பள பட்டியலில் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அப்படி ஆடித்தான் அவர்கள் தேர்வுக்குழு தலைவரின் கவனத்தை பெற வேண்டும்.

நாங்கள் சம்பள பட்டியலுக்கான வீரர்களை தேர்வு செய்வது கிடையாது. அதனை நிர்வாகமும் தேர்வுக்குழுவும் தான் செய்கிறார்கள். அதற்கான தகுதி என்ன என்பது கூட எனக்கு தெரியாது. அவர்கள் எப்போதுமே அந்த 15 வீரர்கள் யார் என்பது பற்றிய ஆலோசனையை தான் என்னிடம் கேட்பார்கள். நானும் ரோகித் ஷர்மாவும் இணைந்து ஆடும் லெவனை மட்டும் தேர்வு செய்து கொடுப்போம்.

நாங்கள் தேர்வு செய்யும் வீரர்கள் சம்பளப் பட்டியலில் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட எங்களுக்கு தெரியாது” என டிராவிட் தெரிவித்துள்ளார்.

சற்று முன்