- Advertisement 3-
Homeவிளையாட்டுராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு.. மொத்தமாக மாறும் பயிற்சியாளர்கள் குழு.. அயர்லாந்து தொடருக்காக பிசிசிஐ செய்யும் மாற்றம்

ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு.. மொத்தமாக மாறும் பயிற்சியாளர்கள் குழு.. அயர்லாந்து தொடருக்காக பிசிசிஐ செய்யும் மாற்றம்

- Advertisement 1-

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஏற்கனவே முடிவடைந்துள்ளது. அதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தத் தொடருக்கு ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழு முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பவுலிங் பயிற்சியாளர் பராஸ் ஆம்ப்ரே உள்ளிட்டோர் இளைஞர்களையும், சீனியர் வீரர்களையும் சிறப்பாக தயார் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கு பின் இந்திய அணி அடுத்தடுத்து பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் டி20 கொண்ட கிரிக்கெட் தொடர், இந்தியா – ஆஸ்திரேலியா தொடர், ஆசியக் கோப்பை, உலகக்கோப்பை என்று முக்கியத் தொடர்களில் விளையாடவுள்ளது.

இதனால் வீரர்களுக்கு ஓய்வு கிடைத்தாலும் பயிற்சியாளர்கள் குழுவுக்கு ஓய்வு கிடைப்பது சிரமமான காரியம். இதனால் ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவினருக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான டி20 அணி அயர்லாந்து சென்று விளையாடவுள்ளது.

- Advertisement 2-

ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 23 வரை நடக்கவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. ராகுல் டிராவிட் குழுவினருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்‌ஷ்மண் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழு அயர்லாந்துக்கு பயணிக்கவுள்ளது.

ஏற்கனவே ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடிய தொடருக்கு விவிஎஸ் லக்‌ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட்டு வந்துள்ளார். அதேபோல் என்சிஏவில் தயாராகி வரும் பும்ரா, ஸ்ரேயாஸ் உள்ளிட்டோர் அயர்லாந்து தொடருக்கு வரவிருப்பதால், அவர்களை கண்காணிக்கவும் விவிஎஸ் லக்‌ஷ்மணுக்கு எளிதாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

சற்று முன்