- Advertisement -
Homeகிரிக்கெட்ரசிகர்கள் இப்போ தெரிஞ்சிகிட்டீங்களா... என்ன நடந்திருக்கு பாருங்க... கோலி, நவீன் குறித்து ரவி சாஸ்திரி பேச்சு

ரசிகர்கள் இப்போ தெரிஞ்சிகிட்டீங்களா… என்ன நடந்திருக்கு பாருங்க… கோலி, நவீன் குறித்து ரவி சாஸ்திரி பேச்சு

-Advertisement-

கடந்த மே மாதம் இந்தியாவில் நடைபெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையேயான போட்டியின் போது மைதானத்திலேயே விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு போட்டி முடிந்ததும் இருவரும் காரசாரமாக வார்த்தைகளை பரிமாறிக் கொண்ட வேளையில் அது சண்டையாகவும் மாறியது. பின்னர் போட்டி முடிந்து நவீன உல் ஹக்கிற்கு 50 சதவீத அபராதமும், விராட் கோலிக்கு 100 சதவீத போட்டி ஊதியத்தையும் அபராதமாக செலுத்தும் படி ஐ.பி.எல் நிர்வாகம் தண்டனை விதித்தது.

அதனை தொடர்ந்து இந்திய ரசிகர்கள் தொடர்ச்சியாக நவீன் உல் ஹக்கை நேரம் கிடைக்கும் போதெல்லாம் விராட் கோலியின் பெயரை சொல்லி சொல்லி அவரை கிண்டல் செய்து வந்தனர். மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்காக அவர் தேர்வானதுமே சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அதிகளவில் அவரை விமர்சித்து கேலி செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அக்டோபர் 11-ஆம் தேதி டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக்கிற்கு இடையே பெரிய அளவில் மோதல் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் விராட் கோலி நவீன் உல் ஹக்கிற்கு கை கொடுத்து, தோளில் தட்டி கொடுத்து அவருடன் சிரித்தபடி நட்பாக நடந்து கொண்டது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் சண்டையெல்லாம் மறந்து தற்போது இளம் வீரரான அவருக்கு விராட் கோலி ஆதரவளித்துள்ளது அனைவரது மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதோடு நவீன் உல் ஹக்கை கிண்டல் செய்யும் ரசிகர்களையும் அவரை கிண்டல் செய்ய வேண்டாம் என விராட் கோலி கேட்டுக் கொண்டது அனைவரது மத்தியிலும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.

-Advertisement-

இந்நிலையில் இப்படி விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பேசிய ரவி சாஸ்திரி கூறுகையில் : விளையாட்டில் இதெல்லாம் ஒரு பகுதி தான். கடந்தவை கடந்தவை ஆகவே இருக்கட்டும். காலம் ஒன்று தான் காயத்தை ஆற்றும் சரியான மருந்து. கிரிக்கெட் உங்களுக்கு பலவற்றை கற்று தரும் இன்று பெரிய திரையில் நாம் பார்த்த விடயம் மிகவும் சிறப்பாக இருந்தது.

கிரிக்கெட் போட்டிகளின் முடிவில் ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப் தான் நிலைத்திருக்கும் என்பது ரசிகர்களுக்கு இப்போது தெரிந்திருக்கலாம். பொதுவாகவே எந்த வீரருமே ஒரு அழுத்தமான வேளையில் தங்களது இயல்பை விட்டு வெளியேறி கோபமாக வார்த்தைகளை உதிர்ப்பது சகஜம் தான். இது எல்லா விளையாட்டிலும் நடக்கும். ஆனால் இன்று என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள், ஆறு மாதங்கள் ஆன பிறகு இருவருமே தங்களை உணர்ந்து தற்போது மீண்டும் இணைந்து இருக்கிறார்கள் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்