- Advertisement -
Homeவிளையாட்டுதோனி இதை சாமர்த்தியமாக தவிர்த்துவிடுவார். சச்சினும் அப்படி தான். கோலிக்கு ரவி சாஸ்திரி இறுதி எச்சரிக்கை

தோனி இதை சாமர்த்தியமாக தவிர்த்துவிடுவார். சச்சினும் அப்படி தான். கோலிக்கு ரவி சாஸ்திரி இறுதி எச்சரிக்கை

- Advertisement-

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெற்ற பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பெங்களூரு அணியின் முன்னணி வீரரான விராட் கோலி போட்டி முடிந்த பிறகு கங்குலியை இரண்டு முறை முறைத்து பார்த்தார். அதோடு போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கை கொடுக்கும் போது கூட கங்குலி வரிசையில் இருந்த போது கோலி அவருக்கு கை கொடுக்க தவித்தார். அதன்பின்னர் இன்ஸ்டாகிராமிலும் கங்குலி மற்றும் கோலி ஆகியோர் ஒருவரை ஒருவர் பின் தொடரவில்லை.

இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை இன்னும் சரியாகவில்லை என்று தெரிகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் தலைவராக இருந்தபோதிலிருந்து விராட் கோலிக்கும், கங்குலிக்கும் பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதே போன்று மே 1-ஆம் தேதி லக்னோ மணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு ஸ்டேடியத்தில் கம்பீருடன் கோலி ஒரு சூடான உரையாடலில் ஈடுபட்டார்.

- Advertisement -

போட்டி முடிந்து கோலி மற்றும் கம்பீர ஆகியோர் காரசாரமாக பேசிக்கொண்ட வீடியோவும் வெளியாகி இருந்தது. இப்படி விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்புடைய வீரராக இருந்தும் கங்குலி மற்றும் கம்பீர் ஆகிய இருவருக்கு எதிராகவும் வார்த்தை முதலில் ஈடுபட்டது வீடியோவாகவும் வைரலாகியது. அதோடு கேமராமேன்களின் பார்வையிலும் இந்த விவகாரம் பிடிபட்டதால் விராட் கோலி நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் : தோனி மற்றும் சச்சின் போன்ற ஜாம்பவான் கூட மைதானங்களில் இதை எதிர் கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் போட்டியில் பங்கேற்று தங்களின் பங்களிப்பை அளிப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர். தொழில்முறையாக கிரிக்கெட்டை அவர்கள் கையாண்டதால் மிகவும் சாமர்த்தியமாக இது போன்ற சூழ்நிலையை தவிர்த்து வந்தனர். ஆனால் தற்போது கோலி, போட்டிக்கு பிறகு கவனமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement-

ஏனெனில் போட்டி முடிந்தும் கேமரா அவரை கண்காணிக்கும் எனவே அவர் கவனமாக இருக்க வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : கடந்து சில வாரங்களாகவே வரிசையாக கோலியுடைய செயல்கள் வீடியோவாக வைரலாகி வருகின்றன. தோனி போன்ற ஒரு நபருக்கு கேமரா உள்ளது தெரியும். சச்சின் டெண்டுல்கர் போன்ற ஒருவருக்கும் கேமரா இருப்பது தெரியும். அவர்கள் இருவரும் மைதானத்தில் இது போன்ற மோதல்களில் ஈடுபட்டதே கிடையாது. எனவே கோலி போட்டி முடிந்து ஓய்வறைக்கு செல்லும் வரை கேமரா தன்னை தொடர்ந்து கவனிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். போட்டி முடிந்ததும் உங்களுடைய உணர்வுகள் எப்படி இருந்தாலும் அதனை கேமராக்கள் பாயிண்ட் செய்யும் என்பதை கோலி உணர வேண்டும் என்ன ரவி சாஸ்திரி கோலிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்