- Advertisement -
Homeகிரிக்கெட்ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு தல தோனி காரணமா? வைரலாகும் சன் ரைசர்ஸ் அணியின் ட்வீட்

ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு தல தோனி காரணமா? வைரலாகும் சன் ரைசர்ஸ் அணியின் ட்வீட்

-Advertisement-

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52-வது லீக் ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட் இழந்து 214 ரன்கள் குவித்தது.

பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பெரிய இலக்கினை துரத்திய சன் ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவை என்று நிலையில் முதல் மூன்று பந்துகளில் அப்துல் சமாத் ஒரு சிக்சர் உட்பட 10 ரன்களை அடித்தார்.

எனவே மீதமுள்ள 3 பந்துகளில் அந்த அணியின் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் சிங்கிள்ஸ் கிடைக்க கடைசி ஒரு பந்தில் ஐந்து ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அந்த தருணத்தில் இருபதாவது ஓவரின் கடைசி பந்தை வீசிய சந்தீப் சர்மா சமதுக்கு ஆப் சைடில் பந்தினை யார்கராக வீச அந்த பந்தினை தூக்கி அடித்த சமாத் ஜாஸ் பட்லரின் கையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் ராஜஸ்தான் அணி வெற்றியை கொண்டாடத் துவங்கினர். ஆனால் களத்தில் இருந்த அம்பயர் அதனை நோபால் என்று அறிவிக்கவே கடைசி பந்து ப்ரீ ஹிட் என்று அறிவிக்கப்பட மீண்டும் சமாத் சிக்சர் அடித்து சன்ரைசர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த வெற்றிக்காக சன்ரைசர்ஸ் அணி அப்துல் சமாத்தை பாராட்டும் விதமாக அவர்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது.

-Advertisement-

அதில் “SAMAD” என்று பதிவிடுவதற்கு பதிலாக “SaMSD” என்று பதிவிட்டது. அதாவது எப்பொழுதுமே ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கடைசி பந்துகளில் அதிக சிக்ஸர்களை அடித்து வெற்றி பெற வைத்தது தோனி என்பதனால் தோனியை போன்றே இன்று சமாத் எங்களுக்காக போட்டியை முடித்து கொடுத்துள்ளார் என்று அவரை பெருமைப்படுத்தும் விதமாக இவ்வாறு சன் ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்