- Advertisement -
Homeகிரிக்கெட்பிளே ஆப் போகாட்டியும் பிரச்சனை இல்ல.. ஐபிஎல் ஹிஸ்டரிலயே மாஸான சாதனை செய்த ஆர்சிபி..

பிளே ஆப் போகாட்டியும் பிரச்சனை இல்ல.. ஐபிஎல் ஹிஸ்டரிலயே மாஸான சாதனை செய்த ஆர்சிபி..

-Advertisement-

நடப்பு சீசனில் ஆர்சிபி அணி மிக பலவீனமாக இருப்பதுடன் மட்டுமில்லாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசை கடும் சொதப்பலாகவும், பந்துவீச்சு அதைவிட படுமோசமாகவும் இருந்து வந்த நிலையில் ஒரு வெற்றிகளை குவிப்பதற்கு கடந்த தடுமாற்றத்தையும் அவர்கள் கண்டு வந்தனர். இதனால் முதல் 8 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டும் பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள ஆறு போட்டியிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஒரு இக்கட்டான நிலையிலும் அவர்கள் இருந்து வந்தனர்.

ஆர்சிபி அணியை பொறுத்தவரையில் பாப் டு பிளெஸ்ஸிஸ், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், கேமரூன் க்ரீன், மேக்ஸ்வெல், ராஜத் படிதர் என பலர் பேட்டிங் வரிசையில் இருந்தாலும் பந்துவீச்சு அவர்களுக்கு மிகச்சிறந்த யூனிட்டாக அமையவில்லை. பெர்குசன், அல்சாரி ஜோசப் என பந்து வீச்சில் அவர்கள் இந்த முறை எடுத்த வீரர்கள் யாருமே பெரிதாக கை கொடுக்காததால் தோல்வியையும் அவர்கள் சந்தித்து வருகின்றனர்.

அப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான் இந்த சீசனில் அவர்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டிருந்தனர். முன்னதாக இவர்கள் இருவரும் மோதிய லீக் போட்டியில், ஹைதராபாத் அணி 287 ரன்கள் எடுத்து ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருந்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஆர்சிபி, 262 ரன்கள் சேர்த்து மிகப்பெரிய ஒரு கடினமான போட்டியையும் ஹைதராபாத் அணிக்கு கொடுத்திருந்தது. அப்படி ஒரு நிலையில் தான் இரு அணியினரும் தங்களின் இரண்டாவது லீக் போட்டியில் மோதி இருந்தது. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி, 206 ரன்களை எடுத்திருந்தது. ஹைதராபாத்திற்கு எதிராக 206 ரன்கள் குறைவானது என்று தோன்றினாலும் ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் மிகத் திறம்பட செயல்பட்டிருந்தனர்.

-Advertisement-

எப்போதும் ஹைதராபாத் அணிக்காக அதிரடி காட்டும் பேட்ஸ்மேன்கள் யாருமே ஆர்சிபியின் பந்து வீச்சில் தப்ப முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருக்க, அவர்களின் வெற்றி வாய்ப்பு குறைந்து கொண்டே போனது. இறுதியில் 171 ரன்கள் மட்டுமே ஹைதராபாத் அணி எடுக்க 35 ரன்கள் வித்தியாசத்தில் தங்களின் இரண்டாவது வெற்றியை இந்த சீசனில் பதிவு செய்தது பெங்களூரு.

அப்படி இருக்கையில் தான் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு சம்பவத்தை பெங்களூர் அணி செய்துள்ளது. ஒரு எதிரணிக்கு எதிராக இரண்டு லீக் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சிறப்பை தற்போது பெங்களூர் அணி பெற்றுள்ளது. 262 மற்றும் 206 ரன்கள் என மொத்தம் 468 ரன்களை இரண்டு போட்டியில் ஹைதராபாத்திற்கு எதிராக ஆர்சிபி பெற்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே இரண்டு போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக சேர்க்கப்பட்ட அதிக ஸ்கோர் இதுதான். இதற்கடுத்த இடத்தில், இதே இரண்டு போட்டியில் ஹைதராபாத் அணி எடுத்த 452 ரன்கள் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்