- Advertisement 3-
Homeவிளையாட்டுதடுமாறிய இந்தியா.. களத்தில் சூர்யகுமார் கொடுத்த அட்வைஸ்.. ரிங்கு சிங் மாஸ் காட்ட காரணம் அந்த...

தடுமாறிய இந்தியா.. களத்தில் சூர்யகுமார் கொடுத்த அட்வைஸ்.. ரிங்கு சிங் மாஸ் காட்ட காரணம் அந்த வார்த்தை தான்..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரில் ஜொலித்த பல இளம் வீரர்கள், இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பை தொடர்ந்து பெற்று வருகின்றனர். அந்த வகையில், ஜெய்ஸ்வால், ருத்துராஜ், ரிங்கு சிங், ரவி பிஷ்னோய் என பல இளம் வீரர்கள் சர்வதேச அணிக்காக ஆடி உலக கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்தும் வருகின்றனர். இவர்கள் அனைவருமே பலம் வாய்ந்த சர்வதேச அணிகளுக்கு எதிராக எந்தவித பயமுமின்றி, ஆடுவது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் வியப்புடன் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்த இந்திய வீரர்களில் பலரும் உற்றுப்பார்க்கும் வீரராக இருந்து வருபவர் ரிங்கு சிங். ஐபிஎல் தொடரில், ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடித்து வெற்றி இலக்கை எட்டி அனைவரையும் வாயை பிளக்க வைத்திருந்தார் ரிங்கு சிங். இப்படி பல போட்டிகளில் ரிங்கு சிங் செய்த மேஜிக், அவருக்கு சர்வதேச அணிக்கான பாதையையும் போட்டுக் கொடுத்தது.

இதனை மிகவும் கெட்டியாக பிடித்துக் கொண்ட ரிங்கு சிங், அற்புதமாக ஆடி வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி இருந்த ரிங்கு சிங், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார். முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்தில் ஏமாற்றமே மிஞ்சி இருந்தது.

ஆனால், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அசத்தலாக ரன் சேர்த்து இந்திய அணியை மீட்டெடுக்கவும் செய்தனர். ஃபினிஷிங் ரோலை மிகவும் அற்புதமாக செய்து வரும் ரிங்கு சிங், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி இருந்தார். 39 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் சேர்த்திருந்தார்.

- Advertisement 2-

இதில், அவர் அடித்த இரண்டு சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர், மைதானத்தில் கண்ணாடி ஒன்றை பதம் பார்க்க, அது உடைந்து போகவும் செய்திருந்தது. இந்த நிலையில், இது பற்றியும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கிற்கு நடுவே கொடுத்த அறிவுரை பற்றியும் போட்டிக்கு பின்னர் மனம் திறந்து பேசியுள்ளார் ரிங்கு சிங்.

“நான் பேட்டிங் செய்ய போன போது 3 விக்கெட்டுகள் விழுந்திருந்தது. அது கடினமாக சூழலாக இருந்த போது என்னுடன் பேட்டிங் செய்த கேப்டன் சூர்யகுமாரிடம் பேசினேன். அப்போது அவர், நான் எப்போதும் போல என்னுடைய ஆட்டத்தை அப்படியே ஆடும்படி அறிவுறுத்தினார். ஆனால் நான் நேரம் எடுத்துக் கொண்டு பந்துகளை சரியாக கணித்து பின்னர் அடித்து ஆடினேன்.

நான் சிக்ஸ் அடித்தது மட்டும் தான் தெரியும். ஆனால், அதனால் கண்ணாடி உடைந்தது பின்னர் தான் தெரிய வந்தது. அந்த செயலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

சற்று முன்