- Advertisement 3-
Homeவிளையாட்டுஅவரு சொன்னது அப்போ புரியல, இப்போ புரியுது.. ரிஷப் பந்த் வாழ்க்கையையே மாற்றிய ரோஹித்..

அவரு சொன்னது அப்போ புரியல, இப்போ புரியுது.. ரிஷப் பந்த் வாழ்க்கையையே மாற்றிய ரோஹித்..

- Advertisement 1-

இன்று ஐபிஎல் போட்டிகள் என உலக அளவில் பல டி 20 லீக் தொடர்கள், 10 ஓவர் போட்டிகள் என ரசிகர்களின் சுவாரஸ்யத்திற்காக பல தொடர்கள் வந்து கொண்டே இருந்தாலும் டெஸ்ட் போட்டியின் தன்மை காலம் கடந்தும் நிலைத்து நிற்கும். சமீப காலமாக சில டெஸ்ட் போட்டிகள் ஒரு சில தினங்களில் முடிந்து போவது அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தாலும் இன்னொரு பக்கம் நிறைய ஆரோக்கியமான டெஸ்ட் கிரிக்கெட்டும் நடந்து தான் வருகிறது.

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இன்னும் பல காலத்திற்கு மறக்க முடியாத டெஸ்ட் தொடர் என்றால் அது நிச்சயம் 2020 – 21 ஆம் ஆண்டில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் தான். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெறும் 36 ரன்களில் ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோல்வி அடைந்திருந்தது.

இதனால், மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் இந்திய அணி தொடரை இழக்கும் என்றும் பல கிரிக்கெட் பிரபலங்கள் தங்களின் கணிப்புகளை தெரிவித்திருந்தனர். ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் போட்டி, முதல் டெஸ்டில் மோசமான தோல்வி என இந்திய அணிக்கு எதிராக பல அம்சங்கள் இருந்தது. ஆனால் இதை அனைத்தையும் உடைத்து எறிந்த இந்தியா, அடுத்த 3 போட்டிகளிலும் ரஹானே தலைமையில் சிறப்பாக ஆடி இருந்தது.

இரண்டாவது டெஸ்டில் வென்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் அசத்தலாக ஆடி டிரா செய்திருந்தது. இதனால் 4 வது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலை இருந்தது. இந்த போட்டியில், இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட கடைசியில் ரிஷப் பந்த் பேட்டிங்கால் வெற்றி பெற்று வரலாறு படைத்திருந்தது.

- Advertisement 2-

அவர் ஃபோர் ஒன்றை அடித்ததுமே ஏதோ உலக கோப்பையை வென்றது போல மைதானத்திற்கே வந்து கொண்டாட தொடங்கினர் இந்திய வீரர்கள். ரிஷப் பந்த் இந்திய அணி சரித்திரம் படைக்க பெரிய பங்கு வகித்திருந்த நிலையில், அப்போது நடந்த சம்பவம் பற்றி தற்போது நினைவு கூர்ந்துள்ளார். இதுபற்றி ரிஷப் பந்த் பேசுகையில், “கப்பாவில் நான் டெஸ்ட போட்டியை வென்று கொடுத்த போது மற்றவர்களை போல நான் அதை கொண்டாடவில்லை.

அப்போது என்னருகில் வந்த ரோஹித் ஷர்மா, ‘நீ இந்திய அணிக்காக என்ன செய்தாய் என உனக்கு புரியவில்லை. நீ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் உன்னுடைய இந்த இன்னிங்சின் அருமை தெரிய வரும்’ என என்னிடம் கூறினார். அதன் பின்னர் தான் நான் ஏதோ பெரிதாக செய்திருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டேன்” என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

சற்று முன்