- Advertisement -
Homeகிரிக்கெட்பாவம் எங்க பவுலர்ஸ்.. பேட்டிங்ல எங்க ஆளுங்க செஞ்ச பெரிய தப்பு.. சோகத்தில் ரிஷப் பந்த்..

பாவம் எங்க பவுலர்ஸ்.. பேட்டிங்ல எங்க ஆளுங்க செஞ்ச பெரிய தப்பு.. சோகத்தில் ரிஷப் பந்த்..

-Advertisement-

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் சீசனின் ஆரம்பமும் தற்போது உள்ள சூழலும் ஏறக்குறைய ஒரே போல தான் உள்ளது. ரிஷப் பந்தின் கம்பேக் ஆரம்பத்தில் டெல்லி அணிக்கு எந்த விதத்திலும் கை கொடுக்கவில்லை. கேப்டன்சி மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கோட்டை விட்டிருந்த அவரது தலைமையில் முதல் 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே டெல்லி வெற்றி கண்டிருந்தது.

இதனை தொடர்ந்து தான் அடுத்த ஐந்து போட்டிகளில் மிகப்பெரிய அளவில் ஃபார்முக்கு வந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்து மற்ற நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற அவர்கள், கம்பீரமாக புள்ளி பட்டியலிலும் முன்னேற்றம் கண்டிருந்தனர். அப்படி ஒரு சூழலில் தான், ஆறாவது இடத்தில் இருந்த டெல்லி அணி, 2 வது இடத்தில் இருந்த கொல்கத்தா அணியை எதிர் கொண்டிருந்தது.

இந்த போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 153 ரன்கள் மட்டும் எடுக்க பின்னர் ஆடிய கொல்கத்தா அணி மிக எளிதாக வெற்றி பெற்று தங்களின் பிளே ஆஃப் வாய்ப்பையும் இன்னும் பலமாக்கி கொண்டுள்ளது. இந்த போட்டியில் டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே பெரிதாக எடுபடாமல் போனது.

அதேபோல டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க தவற, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மட்டும் 35 ரன்கள் எடுத்திருந்தார். இந்த எதிர்பாராத தோல்விக்கு பின்னர் பேசி இருந்த ரிஷப் பந்த், “எப்போதுமே முதலில் பேட்டிங் செய்வது சிறந்த ஆப்ஷன் தான். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் யாருமே நன்றாக பேட்டிங் செய்யவில்லை.

-Advertisement-

ஆனால் நாங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று வருகிறோம். அனைத்து நாளுமே உங்களுடைய நாளாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. ஒரு அணியாக நாங்கள் தொடர்ந்து சிறப்பான பயணத்தை தான் மேற்கொண்டு வருகிறோம். ஆனாலும் இது போன்ற போட்டிகள் டி 20 தொடர்களில் அடிக்கடி வரத்தான் செய்யும்.

அதே வேளையில் 180 முதல் 210 ரன்கள் என்பது நல்ல ஸ்கோராக இந்த போட்டியில் இருந்திருக்கும். அதே போல நாங்கள் எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு கட்டுப்படுத்துவதற்காக ஒரு சிறந்த ஸ்கோரை கொடுக்கவே இல்லை” என வருத்தத்துடன் ரிஷப் பந்த் கூறினார். இன்னும் 3 போட்டிகள் மீதமிருக்க, அனைத்திலும் டெல்லி அணி வென்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேற ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்