- Advertisement 3-
Homeவிளையாட்டுஇளம் வீரர்களுக்கு ரோஹித் போட்ட ஆர்டர்.. அடுத்த மேட்ச்ல சம்பவம் பண்ண காத்திருக்கும் இந்திய அணி..

இளம் வீரர்களுக்கு ரோஹித் போட்ட ஆர்டர்.. அடுத்த மேட்ச்ல சம்பவம் பண்ண காத்திருக்கும் இந்திய அணி..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 2) ஆரம்பமாக உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்தது இன்று வரையிலும் கடுமையான விமர்சனத்தை சந்தித்து தான் வருகிறது. அதே போல, விராட் கோலி, கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடாத சூழலில், அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று தான் தெரிகிறது.

இப்படி இந்திய அணியை சுற்றி பல்வேறு குழப்பங்கள் இருந்த போதிலும் அவர்கள் நிச்சயம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதை எல்லாம் தவிர்த்து விட்டு எப்போதும் போல கம்பேக் கொடுப்பார்கள் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களின் நம்பிக்கை போலவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் மீதமுள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியிலும் திட்டங்களை வகுத்து வருவதாக தெரிகிறது. ஆனால், அதே வேளையில் ஒரு சில சீனியர் வீரர்களைத் தவிர இந்திய அணியில் அதிகம் இளம் வீரர்களே இருப்பதால், அதிலிருந்து தனது அணியைத் தேர்வு செய்யும் குழப்பமும் ரோஹித்திற்கு எழுந்துள்ளது.

ஆனாலும் அதை எல்லாம் தாண்டி, தான் கேப்டன்சியில் யார் என்பதை ரோஹித் ஷர்மா நிச்சயம் நிரூபிப்பார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இதனிடையே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே எஸ் பரத், இரண்டாவது டெஸ்ட் போட்டி பற்றி சில கருத்துக்களை தற்போது தெரிவித்துள்ளார். “ஒரு தோல்விக்கு பின்னர் அதைக் கண்டு துவளாமல் அதிலிருந்து மீண்டு வருவது தான் இந்திய அணியின் ஸ்டைல். முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வீரர்கள் அசத்தலாக ஆடி வெற்றி கண்டிருந்தனர்.

- Advertisement 2-

ஆனால், நான் முன்பு சொன்னதை பல அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் நிச்சயம் ஃபார்முக்கு வந்து எங்களின் திறனை நிரூபிப்போம். முதல் போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் எங்களிடம் பயப்பட வேண்டாம் என்று அணி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மிகப்பெரிய டெஸ்ட் தொடராக இது இருப்பதால் எதை நினைத்தும் நெருக்கடிக்கு உள்ளாக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அணியில் உள்ள வீரர்களும் தனித்தனியாக தங்களது திறனை நிரூபிப்பதில் கவனம் செலுத்த விரும்புகிறார்கள். சிறந்த கிரிக்கெட்டை மட்டும் நீங்கள் ஆட வேண்டும் என்பதைத் தான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் எங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்” என பரத் தெரிவித்துள்ளார்.

சற்று முன்