- Advertisement -
Homeகிரிக்கெட்அந்த 3 பேரால தான் இனி பிரச்சனையே.. ரோஹித்திற்கு காத்திருக்கும் பெரிய தலைவலி.. எப்படி சமாளிக்க...

அந்த 3 பேரால தான் இனி பிரச்சனையே.. ரோஹித்திற்கு காத்திருக்கும் பெரிய தலைவலி.. எப்படி சமாளிக்க போறாரோ..

-Advertisement-

பந்து வீச்சிற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் முழுக்க முழுக்க அதிரடி பேட்டிங் மட்டும் தான் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வருகிறது. புதிதாக அறிமுகமாகும் வீரர்கள், ஏற்கனவே அனுபவம் உள்ள வீரர்கள் என யாராக இருந்தாலும் யாருடைய பந்து என்பதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்களை தொடர்ந்து அடித்து வருகின்றனர். இப்படி இந்த ஐபிஎல் தொடர் மிகப்பெரிய அதிரடி திருவிழாவாக இருந்தாலும் இது இந்திய கிரிக்கெட் அணி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்டோருக்கு மிகப்பெரிய ஒரு தலைவலியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் தொடர் முடிந்த அதே சூட்டோடு டி 20 உலக கோப்பையும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் வைத்து நடைபெற உள்ளது தான். இதற்கான இந்திய அணியின் தேர்வு, ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் இருக்கும் என்ற நிலையில் பல கிரிக்கெட் பிரபலங்களும் தங்களின் உலக கோப்பை இந்திய அணியின் வீரர்கள் பற்றியும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு தான் தற்போது போட்டி அதிகம் இருப்பதாக தெரிகிறது.

கே.எல். ராகுல், இஷான் கிஷன், ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் என அனைத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் இருக்கும் சூழலில் அனைவருமே சிறப்பாக ஆடி வருகின்றனர். பலரும் ராகுல் மற்றும் ரிஷப் பந்த்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் இன்னும் சிலர் சஞ்சு சாம்சனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் தங்களின் கருத்துக்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது. இதில் லக்னோ கேப்டன் ராகுல் 76 ரன்களும், ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 71 ரன்களையும் எடுத்திருந்தனர். இவர்கள் இருவருமே விக்கெட் கீப்பர் கேப்டன்கள் என்ற நிலையில் அவர்களை போலவே இருக்கும் ரிஷப் பந்த்தும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக வெளிப்படுத்தி வருகிறார்.

-Advertisement-

அது மட்டுமில்லாமல் இந்த சீசனில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் சஞ்சு சாம்சன் 385 ரன்களும், கே எல் ராகுல் 378 ரன்களும், ரிஷப் பந்த் 371 ரன்களும் அடித்துள்ளனர். அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் வரிசையிலும் இவர்கள் மூவரும் அடுத்தடுத்து இருக்கும் நிலையில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர், கேப்டனாக இந்த சீசனில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர்.

இப்படி மூவருமே நல்ல ஃபார்மில் இருப்பதால இருப்பதால் இதில் யாரை இந்திய அணி தேர்வு செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் அதே வேளையில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா என அனைவருக்கும் இது ஒரு மிகப்பெரிய தலைவலியாக தான் இருக்கப் போகிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

அதே போல, நல்ல ஃபார்மில் இருந்தும் சில உலக கோப்பைத் தொடர்களில் சஞ்சு சாம்சன் இடம்பெறாமல் போனதால் இந்த முறை அவரை நிச்சயம் எடுக்க வேண்டும் என்பதும் பல கிரிக்கெட் பிரபலங்களின் கருத்தாக உள்ளது.

-Advertisement-

சற்று முன்