- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனி, டிராவிட்டின் முக்கியமான ரெக்கார்ட்.. அடுத்த மேட்ச்ல ஜெயிச்சு துவம்சம் செய்ய காத்திருக்கும் ரோஹித்..

தோனி, டிராவிட்டின் முக்கியமான ரெக்கார்ட்.. அடுத்த மேட்ச்ல ஜெயிச்சு துவம்சம் செய்ய காத்திருக்கும் ரோஹித்..

- Advertisement 1-

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரை இந்திய அணி இறுதி போட்டியில் இழந்தது பலருக்கும் சற்று வருத்தமான விஷயம் தான். ஆனால் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இந்திய அணி அனைத்து தொடர்களையும் தொடர்ந்து வென்று வருவதுடன் மட்டுமல்லாமல் இந்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலக கோப்பைக்காகவும் மிக அதிரடியாக தயாராகி வருகிறது என்றே சொல்லலாம்.

அதிலும் உலகக்கோப்பை தோல்விக்கு பின்னர் துவண்டு போகாமல் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தி வருவதுடன் எப்படியாவது டி 20 உலக கோப்பையை வென்று தன் மீதுள்ள பல விமர்சனங்களை உடைத்தெறிய வேண்டும் என்பதிலும் குறியாக உள்ளார்.

அவர் கேப்டனாக அதிகம் மேம்பட்டுள்ளார் என்பதற்கு தற்போது நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரே சான்றாக உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது. அதிலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பெரிதும் இல்லாமல், சர்பராஸ்கான், துருவ் ஜூரேல், ஜெய்ஸ்வால் என மிகக் குறைந்த டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள இளம் வீரர்கள் இந்திய அணிக்காக மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்டில் சிறந்த அணியான இங்கிலாந்தை சுக்கு நூறாக்கி உள்ளனர்.

இந்த இளம் வீரர்கள் சிறப்பாக ஆடுவதற்கு ரோகித் சர்மாவின் பங்கும் மிகப்பெரியது. அவர்களைத் தொடர்ந்து தேற்றி வருவதுடன், வாய்ப்பையும் கொடுத்து சுதந்திரமாக ஆடவும் அனுமதிப்பதால் இளம் வீரர்களும் பயமில்லாமல் ஆடி சாதிக்கின்றனர். இந்திய மண்ணில் தொடர்ந்து 17 வது டெஸ்ட் தொடரை அவர்கள் வென்றுள்ள நிலையில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி பற்றியும் பல சிறப்பான கருத்துக்கள் இணையத்தில் வலம் வந்து வண்ணம் உள்ளது.

- Advertisement 2-

இந்த நிலையில் தற்போது டிராவிட், தோனி உள்ளிட்டோரின் மிக முக்கியமான சாதனை ஒன்றை டெஸ்டில் சமன் செய்துள்ளார் ரோஹித் சர்மா. இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன் என்ற பெருமை விராட் கோலியிடம் (10 முறை) உள்ளது.

அவருக்கு அடுத்தபடியாக தோனி, டிராவிட், அசாருதீன் ஆகியோர் இந்திய அணியின் கேப்டனாக இருந்து மூன்று முறை இங்கிலாந்து அணியை வென்றுள்ளனர். அப்படி இருக்கும் நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று முறை தொடர்ந்து வெல்ல உதவிய கேப்டன் ரோஹித் சர்மா மூன்று வெற்றிகளுடன் அவர்கள் அனைவரையும் சமன் செய்துள்ளார்.

கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால், ரோஹித் இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்துக்கு முன்னேற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்