- Advertisement -
Homeகிரிக்கெட்ஊருக்கே பருப்பா இருந்தாலும்.. ஆறு தோல்விகளுக்கு பின் ஆர்சிபி செஞ்ச மேஜிக்.. அடங்கி போன...

ஊருக்கே பருப்பா இருந்தாலும்.. ஆறு தோல்விகளுக்கு பின் ஆர்சிபி செஞ்ச மேஜிக்.. அடங்கி போன ஹைதராபாத்..

-Advertisement-

இந்த சீசனில் மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் அடித்து ஐபிஎல் தொடரிலேயே வரலாறு படைத்ததுடன் அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்திருந்தது சன்ரைஸ் ஹைதராபாத் அணி (287 ரன்கள்). அனைத்து அணிகளுக்குமே ஆட்டம் காட்டி புள்ளி பட்டியலிலும் பலமாக திகழும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி கடைசி இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணிக்கு எதிராக பெட்டி பாம்பாய் அடங்கிப் போனது என்றே சொல்லலாம்.

முதலில் பேட்டிங் செய்தாலே 250 ரன்களுக்கும் குறைவில்லாமல் அடித்து வரும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி ஆடிய பெங்களூர் அணியில் தொடக்க வீரர் கோலி 51 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இதனிடையே, மிடில் ஆர்டரில் அதிரடி காட்டி ஆர்சிபி அணியின் ரன் ரேட் உயர காரணமாக இருந்த ரஜத் படிதர் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி கட்ட ஓவர்களில் ஐந்து ஃபோர்களுடன் 37 ரன்களை கேமரூன் க்ரீன் குவிக்க, இதனால் பெங்களூரு அணியின் ரன்னும் 200 ரன்களைத் தாண்டியது. 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்களையும் அவர்கள் எட்டியிருந்தனர்.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அனைத்து போட்டிகளிலும் முதல் பந்தில் இருந்தே சிக்சருக்கு பறக்க விட்டு வந்த டிராவிஸ் ஹெட், ஒரு ரன்னில் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா வழக்கம் போல அதிரடியுடன் ஆடி 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

-Advertisement-

இதன் பின்னர் அடுத்தடுத்து வந்த எந்த வீரர்களும் பெரிதாக ரன் எடுக்காத நிலையில் கேப்டன் பேட் கம்மின்ஸ் மூன்று சிக்ஸர்களுடன் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் 15 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 132 எடுத்திருந்த ஹைதராபாத் அணிக்கு கடைசி ஐந்து ஓவர்களில் 75 ரன்கள் தேவை என்ற நிலையும் இருந்தது.

ஆனாலும், அவர்களால் பெரிதாக ரன் குவிக்க முடியாமல் போக, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால், ஆர்சிபி 35 ரன்கள் வித்தியாசத்தில் தங்களின் இரண்டாவது வெற்றியை இந்த சீசனில் பதிவு செய்துள்ளது. பேட்டிங் என வந்து விட்டாலே 200 ரன்களைத் தொடும் ஹைதராபாத் அணியை பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் இணைந்து கட்டுப்படுத்தி உள்ளது தான் பலரையும் இந்த போட்டியை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது.

-Advertisement-

சற்று முன்