- Advertisement 3-
Homeவிளையாட்டுதல தோனி அனுப்பிய ஒரே மெசேஜ்.. ருத்துராஜ் செஞ்சுரி அடிக்க காரணமாக இருந்த அந்த சீக்ரெட்...

தல தோனி அனுப்பிய ஒரே மெசேஜ்.. ருத்துராஜ் செஞ்சுரி அடிக்க காரணமாக இருந்த அந்த சீக்ரெட் இதுதானா?..

- Advertisement 1-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை இந்திய அணி வென்றாகி விட்டது. இன்னும் ஒரு போட்டியே மீதமுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி அற்புதமாக ஆடி வருகிறது. அது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்து திகழ்வதாகவும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ருத்துராஜ், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, முகேஷ் குமார் உள்ளிட்ட பலரும் ஐபிஎல் போட்டிகளில் தங்களின் திறனை நிரூபித்து தற்போது சர்வதேச அணிக்காகவும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க இளம் வீரராக இருப்பவர் ருத்துராஜ் கெய்க்வாட். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் ருத்துராஜ். ஆரம்பத்தில் இவர் ஆடிய போட்டிகளில் ரன் குவிக்க தடுமாற்றம் கண்டார். அதன் பின்னர் ரூட்டை மாற்றி நேர்த்தியான ஆட்டம் ஆடிய ருத்துராஜ், கடந்த 4 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். சிஎஸ்கே அணி தடுமாற்றம் கண்ட பல போட்டிகளில் தூணாக நின்று போட்டியின் முடிவையே மாற்றி அசர வைத்தவர் ருத்துராஜ்.

தொடர்ந்து தற்போது சர்வதேச போட்டிகளிலும் ஆடி வரும் ருத்துராஜ், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 போட்டியில் அசத்தல் சாதனை ஒன்றையும் படைத்திருந்தார். இரு அணிகளும் மோதிய 3 வது டி 20 போட்டியில், சதமடித்து அசத்தி இருந்தார் ருத்துராஜ்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி 20 போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்ற ருத்துராஜ், 4 வது டி 20 போட்டியில் மற்றொரு சாதனையை புரிந்தார். டி 20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 4,000 ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற கேஎல் ராகுலின் சாதனையை முறியடித்து பட்டையை கிளப்பினார். இப்படி நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் ருத்துராஜ், தனது மென்டரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ் தோனி கொடுத்த அறிவுரை குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“டி 20 போட்டிகள் குறித்து நிறைய விஷயங்களை நான் சிஎஸ்கே அணியிடம் இருந்தும், போட்டியை எப்படி புரிந்து கொள்வது என்பது பற்றி தோனியிடம் இருந்தும் கற்றுக்கொண்டேன். அவர் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தார். அணியின் ஸ்கோர் மற்றும் ஆட்டத்தின் சூழ்நிலையை பொருட்படுத்தாமல் அணிக்கு என்ன தேவை என்பதை பார்க்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

டி 20 போட்டிகளில் நாம் எப்போதும் கொஞ்சம் முன்பாக இருக்க வேண்டும் என்பது தான் மிக முக்கியம். டி 20 போட்டிக்கு முன்பாக பிட்ச் எப்படி இருக்கும் என்பது பற்றி முன்னரே சிந்தித்து பார்த்து செயல்படுகிறேன். மஹி பாய் எப்போதுமே அவசரப்படாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்துவார். ஏனெனில் ஒரு தொடக்க வீரருக்கு டி 20 போட்டியில் கூட போதுமான நேரம் உண்டு என்பதால் தான்” என ருத்துராஜ் கூறியுள்ளார்.

சற்று முன்