- Advertisement -
Homeகிரிக்கெட்நீங்கள் பவுலர் கிட்ட இதை கவனிக்க தவறிட்டீங்க.. உங்கள் தோல்விக்கான காரணம் இது தான் -...

நீங்கள் பவுலர் கிட்ட இதை கவனிக்க தவறிட்டீங்க.. உங்கள் தோல்விக்கான காரணம் இது தான் – சச்சின் விளக்கம்

-Advertisement-

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 13வது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியே வெற்றிபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி தந்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. உலகக்கோப்பை வரலாற்றில் இது மிகப்பெரிய அப்செட்டாகவே பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில் உலகக்கோப்பையில் அவர்களுக்கு கிடைத்த 2வது வெற்றி இதுதான்.

இதற்கு முன் 2015ல் ஸ்காட்லாந்துக்கு எதிராகதான் அவர்களுக்கு முதல் வெற்றி கிடைத்தது. மேலும் 14 தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் குர்பாஸ், இக்ரம் அலிகில் காரணம் என்றால் பவுலிங்கில் சுழற்பந்துவீச்சாளர்களான முஜிப் உர் ரஹ்மான், முகமது நபி, ரஷீத் கான் ஆகியோர் தான் காரணம்.

இவர்கள் மூவரும் ஆட்டத்தில் 25.3 ஓவர்களை வீசி 104 ரன்களை மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். முஜிப் உர் ரஹ்மான், ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது நபி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்த உலகக்கோப்பை புள்ளிகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி கணக்கை தொடங்கியுள்ளது.

-Advertisement-

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் இந்த அபாரமான வெற்றிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது X பக்கத்தில் இது பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக விளையாடியது. களத்தில் அவர்கள் காட்டிய எனர்ஜி எனக்கு பிடித்திருந்தது. குர்பாஸ் அட்டகாசமான இன்னிங்ஸ் ஆடினார்.

தரமான சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்க்கும்போது அவர்களது கையில் பந்தை எப்படி வைத்திருக்கிறார்கள், எப்படி ரலீஸ் செய்கிறார்கள், பந்து எப்படி வரும் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இதை இங்கிலாந்து பேட்டர்கள் செய்ய தவறிவிட்டனர். இதுதான் இங்கிலாந்து தோல்விக்கு வழிவகுத்ததாக நான் உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார். சச்சின் சுட்டிக்காட்டியதை போலவே இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சில்தான் முற்றிலும் சரணடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்