- Advertisement -
Homeகிரிக்கெட்பும்ராவோட ஷாகின் அப்ரிடிய கம்பரே பண்ணாதீங்க... ஷாகின் 25% கூட பும்ரா அளவுக்கு விளையாடல -...

பும்ராவோட ஷாகின் அப்ரிடிய கம்பரே பண்ணாதீங்க… ஷாகின் 25% கூட பும்ரா அளவுக்கு விளையாடல – சல்மான் பட் பேச்சு

-Advertisement-

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் உலகக்கோப்பை தொடரை ஆர்வமுடன் உற்று நோக்கினாலும் அதில் குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற போகும் போட்டியை குறித்து தான் அனைவரது பார்வையும் இருந்து வருகிறது. இதுவரை உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஏழு முறை மோதியுள்ளன. அதில் ஏழு முறையும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. அதன் காரணமாக எட்டாவது முறையாக அக்டோபர் 15 அன்று நடைபெற போகும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆவல் மேலோங்கி உள்ளது.

சாதனைகள் என்பது முறியடிக்க தான். இந்திய அணியின் வெற்றிச் சாதனையை நாங்கள் முறியடிப்போம். எங்கள் அணி வீரர்களின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்பது போல் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஏற்கனவே கூறியுள்ளார். அதேபோல் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டு உங்களுக்கு செல்ஃபி தருகிறேன் என்று ஷஹீன் அப்ரிடி பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார். இப்படிப்பட்ட வார்த்தைகளின் மூலம் அந்த போட்டி சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் தனது youtube சேனலில் சுப்மன் கில்லின் பார்ம் குறித்தும் பும்ரா மற்றும் ஷஹீன் அப்ரிடி குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கில் குறித்த அவர் பேசுவையில், கில் மீண்டும் அணியில் இணைந்தால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய ஒரு பலமாக அமையும். கடந்த 18 மாதங்களாக இந்திய அணியின் முக்கியமான ஒரு வீரராக கில் இருந்துள்ளார். அந்த அணியில் மற்ற யாரும் குவிக்காத அளவுக்கு இவர் தனி ஒருவராக ரண்களை குவித்துள்ளார். அதேபோல இவரது ரன்கள் இந்திய அணியை பலமுறை வெற்றி பெறச் செய்துள்ளது. அதனால் அவர் இந்திய அணியின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிளேயராக இருக்கிறார் என்று சல்மான் பட் கூறியுள்ளார்.

-Advertisement-

பூம்ரா மற்றும் சஹீன் அப்ரிடி குறித்து அவர் பேசுகையில், மக்கள் அனைவரும் ஏன் பும்ரா மற்றும் ஷாஹீன் அப்ரிடியை ஒப்பிடுகிறார்கள்? பூம்ரா இதுவரை விளையாடிய ஆட்டங்களில் 25 சதவீதம் கூட சகின் அப்ரிடி விளையாடியது கிடையாது. பூம்ரா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அதோடு அவர் உலகம் முழுவதும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அப்ரிடியை பொறுத்தவரை அவர் மிகவும் டேலண்ட் ஆன வீரர். ஆனால் அவர் பும்ரா விளையாடிய ஆட்டங்களில் பாதியாவது விளையாடட்டுமே என்று சல்மான் பட் கூறியுள்ளார்.

இந்திய அணியை பொறுத்தவரை கில் டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை விளையாடவில்லை. அவர் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியில் விளையாடினால் நிச்சயம் அது கூடுதல் பலம் தான். என்னினும் பொறுத்திருந்து பார்ப்போம்.

-Advertisement-

சற்று முன்