- Advertisement 3-
Homeவிளையாட்டுஇவரை அணியில சேகாதிங்க... இவங்க யாரையும் நீக்காதீங்க... அதுதான் இந்திய அணிக்கு நல்லது - சோயப்...

இவரை அணியில சேகாதிங்க… இவங்க யாரையும் நீக்காதீங்க… அதுதான் இந்திய அணிக்கு நல்லது – சோயப் அக்தர் பேச்சு

- Advertisement 1-

இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை ஆடிய போட்டிகள் எதிலும் தோல்வி பெறாமல், புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி கடைசியாக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியது. இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை.

மிடில் ஆர்டரில் ரன் குவிப்பில் உதவுவது மற்றும் பந்துவீச்சில், ரன்களை கட்டுப்படுத்துவது மற்றும் முக்கியமான காலக்கட்டத்தில் விக்கெட்டுகளை எடுப்பது என சூழலுக்கு ஏற்ற வகையில், செயலாற்றுவதில் ஹர்திக் பாண்டியா ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளார். கடந்த இரு போட்டியில் ஹர்திக் பாண்டியா களமிறங்காத நிலையிலும், இவரின் இழப்பு இந்திய அணியை பெரிதும் பாதிக்காத வகையில் மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

பந்துவீச்சில் முகமது ஷமி கடந்த இரண்டு போட்டிகளில் மட்டும் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு பக்கபலமாக ஜஸ்பிரித் பும்ரா தன் பங்கிற்கு, இக்கட்டான சூழல்களிலும், பார்ட்னர்ஷிப்களை உடைக்கும் வகையிலும் விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறார். பந்துவீச்சு அடிப்படையில், இந்தியா தற்போது பலமிக்க அணியாக உள்ளது என்றாலும் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர் ஃபார்ம் சற்று கவலை அளிக்கும் வகையில்தான் இருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் 16 பந்துகளில் 4 ரன்களை மட்டும் சேர்த்து, பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல இன்னும் ஐந்து நாட்கள் தான் உள்ளது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement 2-

இது குறித்து பேசிய அவர், “இதற்கு பிறகும் இந்தியா வெற்றி பெற பேட்டர்கள் தேவையில்லை. அவர்களது பந்துவீச்சாளர்கள் உலகக் கோப்பை அட்டவணையில் அதிரடி காட்டி வருகின்றனர். இங்கிலாந்து எதிராக அவர்களின் செயல்பாட்டை பாருங்கள். அவர்கள் 229 ரன்களை கட்டுப்படுத்தி, போட்டியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.”

“இன்னும் சரியாக ஐந்து நல்ல நாட்களில் இந்தியா கோப்பையை வென்றுவிடும். முழுமையாக தயாராகாத ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்க்காதீர்கள். ஹர்திக் பாண்டியா முழுமையாக தயாரான பிறகு, ஸ்ரேயாஸ் அய்யரை நீக்கலாம், ஆனால் பந்துவீச்சாளர்களில் யாரையும் வெளியேற்றி விடாதீர்கள்,” என்று தெரிவித்து உள்ளார்.

சற்று முன்